ETV Bharat / science-and-technology

அமேசான் அலெக்சா : இனி ஆறு புதிய மொழிகளில் ஒலிக்கும்!

அமேசான் நிறுவனத்தின் அலெக்சா மெய்நிகர் செயற்கை நுண்ணறிவு உதவிப்பொறி (Artificial Intelligence voices) வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய பேசும் பாணியை அறிமுகப்படுத்தியுள்ளது.

Amazon introduces  long form speaking styles for Alexa Skills
அமேசான் அலெக்சா : இனி ஆறு புதிய மொழிகளில் ஒலிக்கும்!
author img

By

Published : Apr 18, 2020, 4:37 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

அமெரிக்காவின் வோக்ஸ் மீடியாவால் நடத்தப்படும் தொழில்நுட்ப செய்தி வலைத்தளமான வெர்ஜ், கட்டுரைகள் அல்லது டிஜிட்டல் ஆடியோ கோப்புகளின் உள்ளடக்கங்களைப் படிக்கும்போது மிகவும் இயல்பானதாக, நீண்ட வடிவில் தொடர்ந்து கேட்கும் வாசிப்புக் குரலைக் கேட்க விரும்பும் பயனாளர்களுக்காக அமெரிக்காவைச் சேர்ந்த தொழிநுட்ப உருவாக்குநர்கள் (developers) இதனை வடிமைத்துள்ளதாக கூறுகிறது.

இது குறித்து அமேசான் நிறுவனம் கூறுகையில், “ஆழ்ந்த கற்றலுக்கு உதவும் நீண்ட வடிவிலான மாதிரியால் இந்த புது பாணி இயங்கும். மேலும், அமேசான் அலெக்ஸா-குரல் சாதனங்களை மிகவும் இயல்பான உரையாடலுக்கு வழிவகை செய்கிறது. அதாவது, இடைநிறுத்தங்களுடன் பேச அனுமதிக்கிறது. கடந்த ஆண்டு செய்தி, இசை உள்ளடக்கங்களுக்கான புதிய வடிவிலான பேசும் பாணிகளை வெளியிட்டது. மீண்டும் அதனை கடந்த நவம்பர் மாதம் புதுப்பித்து வெளியிட்டது. அதனை தற்போது இன்னும் நவீனப்படுத்தி இருக்கிறோம்”என்கிறது.

உரையை இயல்பான வகையில் உயிரோட்டமான உரைநடையாக வெளிப்படும் ‘அமேசான் பாலி ’சேவையில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பேச்சு பாணிகளான மத்தேயு, ஜோனா ஆகிய இரு குரல் வகைகளை முற்றிலும் புதுமையாக இன்னும் மேம்படுத்தி இருக்கிறது.

Amazon introduces  long form speaking styles for Alexa Skills
அமேசான் அலெக்சா : இனி ஆறு புதிய மொழிகளில் ஒலிக்கும்!

எடுத்துக்காட்டாக, ஒரு வலைப்பக்கத்தில் உள்ள நூலையோ, டிஜிட்டல் ஆடியோவையோ விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த புதிய பேசும் பாணியை பயன்படுத்தி தொலைக்காட்சி செய்தி அறிவிப்பாளர்கள், வானொலி தொகுப்பாளர்களிடமிருந்து கேட்பதைப் போலவே ஒலிக்கும்.

பாலியின் பேசும் பாணி குரல்கள், சில குரல்களுக்கு கிடைக்கின்றன, மேலும் 10 புதிய பாலி குரல்களும் டெவலப்பர்களுக்கு அலெக்சா திறன்களை உருவாக்க கிடைக்கின்றன. இந்த புதிய குரல்கள், ஆறு புதிய மொழிகளில் தற்போது கிடைக்கின்றன.

இதையும் படிங்க : மருத்துவ உபகரணங்களை ஏற்றிவரச் சீனா சென்றுள்ள ஏர் இந்தியா விமானம்!

Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.