இந்தியாவில் மின்சார வாகன (இ-பைக்) இயக்கம் அதிகரித்துவருகிறது. இதையடுத்து ரத்தன் டாடா, டார்க் மோட்டார்ஸில் முதலீடு செய்யவுள்ளார். இது அவரது சமீபத்திய தேர்வுகளில் ஒன்றாகும். அவர் டார்க் மோட்டார்ஸில் முதலீடு செய்த தொகை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
அந்த தகவலில், “டார்க் மோட்டர்ஸின் புனே ஆலையில் அதன் T6X மோட்டார்சைக்கிள் கிட்டத்தட்ட தயாராக உள்ளது. விரைவில் அறிமுகமாகவுள்ள நிலையில் இதன் விற்பனை மூலம், நிறுவனம் ரூ.240 கோடி நிதி திரட்ட விரும்புவதாக” உள்ளது.
கல்யா குழுமத்தின் பாரத் ஃபோர்ஜ் 49 சதவீதம் டார்க் மோட்டார்ஸில் மிகப்பெரிய பங்குதாரராக உள்ளார். ஓலா கேப்ஸின் விளம்பரதாரரான பவிஷ் அகர்வால் மற்றொரு முதலீட்டாளர் ஆவார். அறிமுகத்துக்கு தயாராக இருக்கும் T6X வாகனம் குறித்து அந்நிறுவனம் தரப்பில் கூறப்படுவதாவது:-
3.5 kWh Li-Ion பேட்டரியுடையது, ஒரு முறை பேட்டரியை நிரப்பினால் இது 100KM இயக்கக்கூடியது பேட்டரிகளை ரீசார்ஜ் செய்வதற்காக, நிறுவனம் ஒரு வேகமான சார்ஜரை உருவாக்கியுள்ளது. இதை ஒரு மணிநேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.
பேட்டரி தூசி மற்றும் நீர்ப்புகாது. இதன் விலை சுமார் ரூ 1.5 லட்சம் இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
இதையும் படிக்க: ஹார்லி-டேவிட்சனின் பைக் உற்பத்தி நிறுத்தம்!