ETV Bharat / science-and-technology

மாருதி ஸ்விஃப்ட் 2021: ரூ.5.73 லட்சம் முதல் விற்பனைக்கு!

author img

By

Published : Feb 25, 2021, 10:36 PM IST

புதிய மாருதி ஸ்விஃப்ட் 2021 பதிப்பு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் விற்பனை விலை ரூ.5.73 லட்சம் முதல் ரூ.8.41 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Maruti Swift 2021, மாருதி ஸ்விஃப்ட் 2021
Maruti Swift 2021

டெல்லி: புதிய தொழில்நுட்பங்கள், அசத்தலான அம்சங்களுடன் புதிய மாருதி ஸ்விஃப்ட் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை 24 லட்சம் பயனர்கள் மாருதி ஸ்விஃப்ட் கார்களின் பயனர்களாக உள்ளனர். இச்சூழலில் தனது புதிய ஸ்விஃப்ட் பதிப்பை மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மூன்றாம் தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரின் பொலிவு கூட்டப்பட்ட பதிப்பாக இந்தப் புதிய ஸ்விஃப்ட் 2021 வந்துள்ளது. இந்தக் காரின் முன்புற க்ரில் அமைப்பில் தேன்கூடு பின்னல் வலை அமைப்பு மற்றும் க்ரோம் பட்டையுடன் புதிய பொலிவு கண்டுள்ளது.

புதிய ஸ்விஃப்ட் காரில் இரட்டை வண்ணத் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது டாப் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். கறுப்பு வண்ண கூரையுடன் பியர்ல் ஆர்டிக் ஒயிட் மற்றும் சாலிட் ஃபயர் ரெட் ஆகிய வண்ணத் தேர்வுகளும், வெள்ளை வண்ண கூரையுடன் மிட்நைட் புளூ வண்ணத் தேர்வும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

காரின் உள் அமைப்பு

உட்புறத்தில் கறுப்பு வண்ண இன்டீரியர் தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. 7 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ரியர் வியூ கேமரா, கீ லெஸ் என்ட்ரி ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ அப்ளிகேஷன் மூலமாக நிகழ்நேர முறையில் போக்குவரத்து நிலவரம் குறித்த தகவல்களையும் பெற முடியும்.

விஎக்ஸ்ஐ வேரியண்ட்டில் புதிய ஆடியோ சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வால்யூம் கன்ட்ரோல் மற்றும் பாடல்களை மாற்றுவதற்கான டிராக் சேஞ்ச் போன்வற்றை தொடு உணர் பொத்தான்கள் மூலமாக மாற்ற முடியும். புளூடூத், யுஎஸ்பி மற்றும் ஆக்ஸ் போர்ட் ஆகியவையும் தக்க வைக்கப்பட்டுள்ளன.

புதிய பெட்ரோல் எஞ்சின்

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் முக்கிய அம்சமாக புதிய 1.2 லிட்டர் டியூவல் ஜெட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 90 எச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். புதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் இல்லை

இந்த காரில் ஐட்லிங் ஸ்டார்ட் - ஸ்டாப் தொழில்நுட்ப வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. மாருதி பலேனோ காரில் வழங்கப்படும் இதே பெட்ரோல் எஞ்சினுடன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது. ஆனால், புதிய ஸ்விஃப்ட் காரில் மைல்டு ஹைப்ரிட் கொடுக்கப்படவில்லை.

காரின் மைலேஜ்

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் மேனுவல் வேரியண்ட் லிட்டருக்கு 23.20 கிமீ மைலேஜையும், ஏஎம்டி மாடல் 23.76 கிமீ மைலேஜையும் வழங்கும் என அராய் சான்று தெரிவிக்கிறது.

பாதுகாப்பு வசதிகள்

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் ஆட்டோமேட்டிக் பதிப்பில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஹில் ஹோல்டு வசதிகள் உள்ளன. ஸ்டீயரிங் வீல் இயல்பு நிலைக்கு வருவதற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பிரேக் சிஸ்டத்துடன் வந்துள்ளது.

விலை விபரம்

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் மேனுவல் கியர்பாக்ஸ் பதிப்பானது ரூ.5.73 லட்சம் முதல் ரூ.7.91 லட்சம் வரையிலான விற்பனையக விலையிலும், ஏஎம்டி பதிப்பானது ரூ.6.86 லட்சம் முதல் ரூ.8.41 லட்சம் வரையிலான விற்பனையக விலையிலும் கிடைக்கும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.