இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம், புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்டீல்த் ஸ்கூட்டர், 72 ஆயிரத்து 950 ரூபாய்க்கு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரானது 125 சிசி பிஎஸ் எஞ்சினைக் கொண்டுள்ளது.
இது குறித்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தைச் சேர்ந்த நவீன் சவுகான் கூறுகையில், "எங்கள் ஸ்கூட்டர் பிராண்ட் ஆன ’மேஸ்ட்ரோ எட்ஜ்’ வாடிக்கையாளர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. மேலும் இந்தப் புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்டீல்த், எங்கள் பிராண்டின் பெருமையை அதிகரிக்கும். மேலும், வரவிருக்கும் வாரங்களில் பல புதிய தயாரிப்பு சந்தையில் அறிமுகப்படுத்தபடும்" என்றார்.