ETV Bharat / science-and-technology

வெறும் 45 விநாடிகளில் ரூ.1.75 கோடி சம்பாதித்த இளம் யூ-ட்யூபர்! - என்எப்டி வருவாய்

16 லட்சம் பின்தொடர்பவர்களைக் (followers) கொண்டுள்ள இளம் யூ-ட்யூபர் வெறும் 45 விநாடிகளில் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெறும் 45 விநாடிகளில் ரூ.1.75 கோடி சம்பாதித்த இளம் யூ-ட்யூபர்

author img

By

Published : Feb 18, 2022, 5:06 PM IST

கலிஃபோர்னியாவில் 'ஜோமா டெக்' என்ற பெயரில் சேனல் நடத்திவரும் பொறியாளரான இளம் யூ-ட்யூபர் ஜோனத்தன் மா, கணினி நிரல் (computer programming), கிரிப்டோ, தொழில்நுட்பம் ஆகியவற்றின் காணொலிகளைப் பகிர்ந்துவருகிறார்.

இந்த மாதத் தொடக்கத்தில், அவர் தனது என்.எஃப்.டி. (NFT) வருவாயான 'Vaxxed Doggos'-ஐ வெளியிட்டார், என்.எஃப்.டி., டிஜிட்டல் பணத்திற்காக அவர் 42 விநாடிகளில் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சம்பாதித்தார். இதில் செலவையெல்லாம் கழித்தாலும் அவருக்கு ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மிஞ்சுகிறது.

அமெரிக்கரான இவரின் கனவு என்பது திரைப்படத் தயாரிப்பாளர் ஆவதே, இதற்கு சிறிது காலம் ஆகலாம். இருப்பினும் ஓவர் நைட்டில் கோடிக்கணக்கில் சம்பாதித்து அனைவரையும் வாயைப் பிளக்க வைத்துள்ளார் மா. இவர் முன்னாள் ஃபேஸ்புக், கூகுள் மென்பொருள் பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

NFT என்றால் என்ன?

என்.எஃப்.டி. (NFT) என்பது பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் பொருள்களை வாங்குவதும் விற்பதும் ஆகும். கிரிப்டோகரன்சிகள் என்.எஃப்.டி.யின் பிரத்யேகத் தளத்திலிருந்து வாங்கி விற்கப்படுகின்றன.

ஊடகச் செய்திகளின்படி, ஜோனத்தன் என்.எஃப்.டி. சேகரிப்பை அதிகரித்துள்ளார். இதன்மூலம் அவரால் திரைப்பட தயாரிப்பாளர் ஆக முடியும். மேலும் அவர் என்.எஃப்.டி. வருவாய்க்காக சர்வர் (Discord server) ஒன்றைக் கட்டமைத்துள்ளார் எனத் தெரியவருகிறது.

இதையும் படிங்க: மாலை அணிவிக்க நெருங்கிய பாஜகவினர்: ராஜ்நாத்துக்கு அடுத்து நடந்தது என்ன தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.