ETV Bharat / opinion

பைடனின் அதிபர் பதவிக் காலம் எப்படி இருக்கும்? - அமெரிக்க பதவியேற்பு

“ஓபாமா கேர்“ என்று அழைக்கப்படும் சுகாதாரப் பாதுகாப்புச் சட்டம் ஓபாமா நிர்வாகத்தின் ஓர் பிரத்தியேக அடையாளமாக இருந்தது. அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க அதனை மேலும் மேம்படுத்த பைடன் விரும்புகிறார்.  பெரும்பாலான மக்கள் ஏற்கனவே பயன்படுத்தும் பிரிமீயம் மானியங்களை அதிகரிக்கும் அதே வேளையில், உழைக்கும் வயதுள்ள அமெரிக்கர்களுக்கான தனியார் காப்பீட்டு சந்தைகளுடன் போட்டியிட அவர் ஒரு “மெடிகேர் போன்ற பொது விருப்பத்தை“ உருவாக்குவார். நடுத்தரவர்க்கக் குடும்பங்களுக்கு மானிய விலையில் சுகாதாரக் காப்பீடு பெறச் செய்வார்.

பைடன்
பைடன்
author img

By

Published : Jan 20, 2021, 4:31 PM IST

கரோனா வைரஸ், சுகாதாரப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், கல்வி முதல் பல்வேறு விவகாரங்கள் வரையிலான பிரச்னைகள் குறித்து, அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் பார்த்ததைவிட அமெரிக்காவை மிகவும் மாறுபட்டப் பாதையில் கொண்டு செல்வதாக ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியிலிருந்து அதிபர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர், பாரிஸ் பருவநிலை ஒபந்தத்தினை திரும்பப் பெறுதல், சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு எதிரான பாதுகாப்புகளைப் பலவீனப்படுத்துதல் போன்ற விவகாரங்களில் ட்ரம்ப்பின் கொள்கை போல் அல்லாமல் முன்னிருந்ததுபோல் மாற்றியமைப்பதாக உறுதியளிக்கிறார்.

கட்டுபடியாகக்கூடிய பராமரிப்புச் சட்டத்தை ட்ரம்ப் தள்ளுபடி செய்ய விரும்பினால், அதிக அமெரிக்கர்களை உள்ளடக்குவதற்கு ஒரு பொது விருப்பத்தினை இணைத்து “ஒபாமா கேர்“ விரிவாக்கத்தினை முன்மொழிகிறார்.

பைடனின் அதிபர் காலம் எப்படியாக இருக்கும் என்பதைபற்றி நாங்கள் அறிந்தவை பின்வருமாறுꓽ

பொருளாதாரம், வரிகள் மற்றும் கடன்ꓽ

ஜனவரி 14 ஆம் தேதி, அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் நாட்டின் பொருளாதாரத்தைப் புதுப்பிக்கவும், கரோனா வைரஸை எதிர்த்துப் போராடவும் 1.9 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் திட்டத்தினை அறிவித்தார். ஒரு இணையானப் பாதையில், இந்த அறிவிப்பு பொருளாதாரத்தை உறுதிப்படுத்த மற்றுமொரு உதவிச் சுற்றினை வழங்குவதாக இருக்கிறது. அதே சமயத்தில், பொது சுகாதாரத்திற்கான முயற்சி தொற்றுநோயைக் காட்டிலும் மேலோங்க முயலுகிறது.

“அமெரிக்க மீட்புத் திட்டம்“ என்று அழைக்கப்படும் திட்டமானது, தொற்று நோயைத் தடுத்து நிறுத்துவதையும், தடுப்பூசித் தயாரிப்பினை விரைவு படுத்துவதையும், நீண்டகால பொருளாதார வீழ்ச்சியுடன் போராடும் தனி நபர்கள், மாநிலங்கள் மற்றும் உள்ளூர் அரசுகள், மேலும் வணிகங்கள் போன்றவற்றிற்கு நிதி உதவியினை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதிபர் பைடன் எதில் கவனம் செலுத்துவார்?
அதிபர் பைடன் எதில் கவனம் செலுத்துவார்?

கோவிட்- 19 ஐ கட்டுப்படுத்தும் வரை பொருளாதாரத்தினை முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்று வாதாடுகிறார்.

முன்னாள் துணை அதிபர், நீண்டகால மீட்புக்காக ஒரு நீட்டிக்கப்பட்ட மந்தமான நிலையினைத் தவிர்ப்பதற்கும், வெள்ளையர்களல்லாத அமெரிக்கர்களை விகிதாசாரமாகப் பாதிக்கும் நீண்டகால செல்வ சமத்துமின்மையினை நிவர்த்தி செய்வதற்கும் பரவலான கூட்டாட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அவர் தனது பெரிய செலவுகளின் கீழுள்ள சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார காப்பீட்டுத் திட்டங்களுக்கான செலவுகளுக்கானத் தொகையின் பெரும்பகுதியை 2017 ஜிஓபி வரி மாற்றத்தின் மூலம் திரும்பப் பெறுவார். அவர் விரும்புகின்ற பெருநிறுவன வருமான வரி 28 விழுக்காடு என்பது முன்பு இருந்ததைவிடக் குறைவானதாகவும் இப்போது இருப்பதைவிட அதிகமாகவும் உள்ளது. மேலும் வருடாந்திர வரி மற்றும் ஊதிய வரி விதிப்பானது 400,000 டாலருக்கும் அதிகமான வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கு மட்டும் உயர்த்தப்படுவதாய் இருக்கிறது. இவை அனைத்தும் 10 ஆண்டுகளில் 4 ட்ரில்லியன் டாலர் அல்லது அதற்கும் மேலே வருவாயைப் பெருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பைடன் குடியேற்றத்தை ஒரு பொருளாதார விவிகாரமாக வடிவமைக்கிறார். சட்டப்பூர்வ குடியேற்றத்திற்கான இடங்களை விரிவாக்கவும், சட்டவிரோதமாக, ஆனால் ஏற்கனவே தொழிலாளர்களாகவும், நுகர்வோர்களாகவும் பொருளாதரத்திற்குப் பங்களிக்கிறவர்களாகவும், நாட்டில் உள்ள சுமார் 11 மில்லியன் மக்களுக்குக் குடியுரிமைப் பாதையினை வழங்கவும் அவர் விரும்புகிறார்.

பைடனின் பரப்புரை திட்டங்கள் தேசியக் கடனை 10 ஆண்டுகளில் சுமார் 5.6 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு அதிகப்படுத்தும் என்று ஒரு பொறுப்பான கூட்டாட்சி பட்ஜெட்டுக்கான குழுவின் பகுப்பாய்வு மதிப்பிடுகிறது.

தேசியக் கடனானது தற்போது 20 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமாகவே உள்ளது.

கரோனா வரைஸின் சர்வதேசப் பரவல்

அதிபர் மற்றும் கூட்டாட்சி அரசு சர்வதேச பரவலான நெருக்கடி நிலைமைகளை சமாளிக்கவே உள்ளது என்று பைடன் ட்ரம்புடன் வாதிடும்போது தனது கூர்மையான முரண்பாடுகளை வரைகிறார். அவர் ட்ரம்பைப் போலல்லாமல், வைரஸை எதிர்த்துப் போராடும் போராட்டம் மாநில ஆளுநர்கள் மட்டுமே உரியது என்பதை நம்பாமல், கூட்டாட்சி அரசாங்கத்தின் ஆதரவும் இருக்கவேண்டும் என்கிறார்.

வணிக மற்றும் தனிநபர்கள், மாநிலம் மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் போன்றவற்றுடன் சேர்ந்து, தொற்றுநோய்களினால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலைத் தேக்கங்களை சமாளிக்க பைடன் தாராளமான கூட்டாட்சி செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்கிறார். பாதுகாப்பு உற்பத்திச் சட்டத்தை தீவிரமாகப் பயன்படுத்தப்போவதாக அவர் உறுதியளித்தார். முக்கியமான பொருட்களை நேரடியாக உற்பத்தி செய்ய அதிபர் பயன்படுத்தக்கூடிய போர்க்கால சட்டத்தினையும் உபயோகப்படுத்தப்போவதாக உறுதியளித்துள்ளார். ட்ரம்ப் அந்தச் சட்டத்தை செயற்கை சுவாசத்திற்கு உதவும் கருவி போன்றவைகளை உற்பத்தி செய்ய பயன்படுத்தியுள்ளார்.

ஒரு நிலையான செய்தியைப் பொதுமக்களுக்குத் தெரிவிப்பதற்காக அரசாங்கத்தின் விஞ்ஞானிகளையும், மருத்துவர்களையும் உயர்த்துவதாகவும், மீண்டும் அமெரிக்காவை உலக சுகாதார நிறுவனத்தில் இணைக்கவும் பைடன் உறுதியளிக்கிறார்.

தான் பதவி ஏற்பதற்கு முன்னதாக உள்ள காலத்தைப் பயன்படுத்தி நாடு தழுவிய முகமூடி ஆணை என்னவாக இருக்கும் என்பதைக் கேட்டறிய ஒவ்வொரு ஆளுநருடனும் கூட்டங்களை கூட்டுவதாக அவர் உறுதியளித்துள்ளார். ஏனெனில் கூட்டாட்சி அரசுக்கு அந்த அதிகாரம் இல்லாததால் அவ்வாறு செய்வதாக உறுதியளித்துள்ளார். இதுபோன்ற அனைத்து உத்தரவுகளையும் அமல்படுத்துவது கேள்விக்குரியதாக இருந்தாலும், அதற்கான விதிகளை மாவட்ட மற்றும் உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து பெறுவதற்காக இப்படிப்பட்ட கூட்டங்களைக் கூட்டுவதாக பைடன் கூறுகிறார்.

சுகாதாரப் பாதுகாப்பு

“ஓபாமா கேர்“ என்று அழைக்கப்படும் சுகாதாரப் பாதுகாப்புச் சட்டம் ஓபாமா நிர்வாகத்தின் ஓர் பிரத்தியேக அடையாளமாக இருந்தது. அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க அதனை மேலும் மேம்படுத்த பைடன் விரும்புகிறார்.

பெரும்பாலான மக்கள் ஏற்கனவே பயன்படுத்தும் பிரிமீயம் மானியங்களை அதிகரிக்கும் அதே வேளையில், உழைக்கும் வயதுள்ள அமெரிக்கர்களுக்கான தனியார் காப்பீட்டு சந்தைகளுடன் போட்டியிட அவர் ஒரு “மெடிகேர் போன்ற பொது விருப்பத்தை“ உருவாக்குவார். நடுத்தரவர்க்கக் குடும்பங்களுக்கு மானிய விலையில் சுகாதாரக் காப்பீடு பெறச் செய்வார்.

தனது திட்டத்திற்கு 10 ஆண்டுகளில் சுமார் 750 பில்லியன் டாலர் செலவாகும் என்று பைடன் மதிப்பிடுகிறார். இது 2010 சுகாதாரச் சட்டத்தினை அகற்ற விரும்பும் ட்ரம்பிற்கும், தனியார் காப்பீட்டை முழுவதுமாக மாற்றுவதற்கு அரசாங்கத்தால் நடத்தப்படும் முறையை விரும்பும் முற்போக்குவாதிகளுக்கும் இடையில் பைடனை நிலைநிறுத்துகிறது. பைடன் தனது அணுகுமுறையை உலகளாவிய பாதுகாப்புக்கான அடுத்த கட்டமாகவும், காங்கிரஸின் மூலம் பெற்கூடிய ஒரு வழியாகவும் பார்க்கிறார்.

அதிபராக, பைடன் அந்த முடிவின் வீழ்ச்சியினை சமாளிக்க வேண்டியிருக்கும். பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைப் பொறுத்த வரையில், அரசாங்கத் திட்டங்கள் மற்றும் தனியார் செலுத்தும் விலைகளை மெடிகேர் பேச்சுவார்த்தை நடத்தி நிர்ணயம் செய்ய ஏதுவாக்கும் சட்டங்களை பைடன் ஆதரிக்கிறார். மெடிகேர் மற்றும் பிற கூட்டாட்சித் திட்டங்களின் கீழ் உள்ளடக்கமான மக்கள் வாங்கும் மருந்துகளின் விலையை பணவீக்கத்தைவிட வேகமாக உயர்த்தும் மருந்து நிறுவனங்களைத் தடைசெய்வார். மற்ற நாடுகள் செலுத்தும் விலையினை அளவுகோலாகப் பயன்படுத்தி, கடுமையான நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவும் “சிறப்பு மருந்துகளுக்கான“ ஆரம்ப விலைகளையும் அவர் கட்டுப்படுத்துவார்.

பைடன், மெடிகேரில் பதிவு செய்தவர்களுக்கான வருடாந்திர மருந்து செலவுகளுக்கென்று ஒரு வரம்பை வைப்பார். இது ட்ரம்ப் முயற்சி செய்ததொன்று ஆகும். ஆனால், அதை காங்கிரஸின் மூலம் பெற முடியவில்லை. ட்ரம்பைப் போலவே, பைடனும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்பட்டு இறக்குமதி செய்ய அனுமதிப்பார்.

குடிவரவு

குடியேற்றம் குறித்த ட்ரம்பின் செயல்பாடுகள் அமெரிக்காவின் மதிப்புகள் மீதான “இடைவிடாத தாக்குதல்“ என்று பைடன் அழைத்தார். மேலும் எல்லை அமலாக்த்தைத் தொடர்ந்து பராமரிக்கும்போது “சேதத்தை நீக்குவேன்“ என்றும் கூறுகிறார்.

மேலும், சிறுவயதினர் வருகைக்கான ஒத்திவைக்கப்பட்ட நடவடிக்கை அல்லது DACAஐ உடனடியாக மீண்டும் நிறுவுவேன் என்று பைடன் கூறுகிறார். இது சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்ட குழந்தைகளைச் சட்டப்பூர்வ குடியிருப்பாளர்களாக இருக்க அனுமதித்தது. மேலும் ட்ரம்ப் விதித்த புகலிடம் மீதான கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருகிறது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் “பொதுக் கட்டண விதி“ யை முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். இது மருத்துவ உதவி, உணவு முத்திரைகள் அல்லது வீட்டு வவுச்சர்கள் போன்ற பொதுச் சேவைகளை பயன்படுத்தும் மக்களுக்கு விசாக்கள் அல்லது வதிவிடத்தை மறுக்கும். ட்ரம்ப் கொள்கைகளை திரும்பப் பெறுவதற்கான வழிகளை அவரது நிர்வாகம் ஆய்வு செய்யும் போது பைடன் அனைத்து நாடு கடத்தல்களுக்கும் 100 நாள் முடக்கத்தினை ஆதரிப்பார். சட்ட விரோதமாக அமெரிக்காவிற்கு வந்து, குற்றங்களுக்குத் தண்டனை பெற்றவர்கள் அல்லது தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்திய புலம்பெயர்ந்தோரை அகற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கும் ஒபாமா காலக் கொள்கையினை பைடன் இறுதியில் மீட்டெடுப்பார். இது சட்ட விரோதமாக நாட்டிற்கு வந்த அனைத்து புலம்பெயர்ந்தோருக்கும் மாறான ட்ரம்பின் அணுகுமுறை. அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லையில் புதிய சுவர்களைக் கட்டுவதற்கான அனைத்து நிதிகளையும் நிறுத்துவதாக பைடன் கூறியுள்ளார்.

வெளியுறவுக் கொள்கையும் தேசீயப் பாதுகாப்பும்

அமெரிக்க துருப்புக்களின் விமான சுமைகளுக்குப் பதிலாக அமெரிக்க சிறப்புப் படைகள் மற்றும் வான்வழித் தாக்குதல்களுடன் வெளி நாடுகளில் தீவிரவாத போராளிகளை எதிர்த்துப் போராடும் ஒரு மூலோபாயத்தை பைடன் ஆதரிக்கிறார். குவாண்டனாமோ விரிகுடாவில் உள்ள தடுப்புக் காவல் நிலையத்தை அமெரிக்க மூடுவதைப் பார்க்க அவர் விரும்புகிறார். ஈராக் மீதான 2003 படையெடுப்பு உட்பட சில அமெரிக்க ராணுவத் தலையீடுகளை அவர் ஆதரித்தார். இப்போது அது ஒரு தவறு என்று கூறுகிறார். ஆனால் அவர் இராஜ தந்திரத்தைச் சார்ந்து கூட்டணிகள் மற்றும் உலகளாவிய நிறுவனங்கள் மூலம் தீர்வுகளை அடைய முயலுகிறார்.

அவர் நேட்டோவின் வலுவான ஒரு ஆதரவாளர். நேட்டோவை பலவீனப்படுத்தவும், ஐரோப்பிய ஒன்றியத்தைப் பிளவுபடுத்தவும், அமெரிக்க தேர்தல் முறையை குறைமதிப்பீட்டிற்கு உட்படுத்த முயற்சிப்பதன் மூலமும் மேற்க்கத்திய ஜனநாயகத்தின் அஸ்திபாரத்திலிருந்து மாஸ்கோ விலகிச் செல்கிறது என்று அவர் எச்சரிக்கிறார். ரஷ்யா மேற்கத்திய நிதி நிறுவனங்கள் மூலமாக பில்லியன் கணக்கான டாலர்களைத் தகாதவிதத்தில் பயன்படுத்தி அரசியல்வாதிகள் மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.

ஆசிய-பசிபிக் கடற்படையின் இருப்பை அதிகரிக்கவும், ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேஷியாவுடனான கூட்டணிகளை வலுப்படுத்தவும் பைடன் அழைப்பு விடுத்துள்ளார். மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தானில் போர்களை முடிவுக்குக் கொண்டுவருவதில் அவர் ட்ரம்புடன் இணைகிறார். ஆனால் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு அமெரிக்க ஒரு சிறிய படையை வைத்திருக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார்.

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் போன்ற இருதரப்பு மற்றும் சர்வதேச ஒப்பந்தங்களில் இருந்து வெளியேறுவதற்கான ட்ரம்ப்பின் முடிவுகள் மற்ற நாடுகள் வாஷிங்டனின் வார்த்தையை சந்தேகிக்க வழிவகுத்தன என்று அவர் கூறுகிறார். ஊழலை எதிர்த்துப் போராடுவது, சர்வாதிகாரத்தைத் தடுப்பது மற்றும் மனித உரிமைகளை ஆதரிப்பது போன்றவற்றைக் குறித்து விவாதிக்க அனைத்து ஜனநாயக நாடுகளையும் ஒரு உச்சிமாநாட்டிற்கு அழைக்க பைடன் விரும்புகிறார்.

இஸ்ரேலுக்கு “இரும்புக் கவச“ ஆதரவைக் கூறும் பைடன், இணைப்பைக் கட்டுப்படுத்த விரும்புகிறார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான நீண்ட மோதலில் இரு மாநிலத் தீர்வுக்கு ஆதரவு அளித்துள்ளார். ட்ரம்ப் அமெரிக்கத் தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலேமிற்கு நகர்த்திய பின்னர் அதை அங்கேயே வைத்திருப்பேன் என்று கூறுகிறார்.

ட்ரம்பின் கிம் ஜாங் உனுடனான இராஜ தந்திரத்தை பைடன் விமர்சனம் செய்கிறார். ட்ரம்பிற்கும் வடகொரியத் தலைருக்கும் இடையே உள்ள ஒரு தனித்துவ ராஜ தந்திரம் அந்த வடகொரியத் தலைவருக்கு சட்டபூர்வத் தன்மையை அளித்துவிட்டதாகவும் கிம் தனது அணு ஆயுதங்களை கைவிடவேண்டும் என்று நம்பவில்லை என்றும் கூறினார்.

சுற்றுச்சூழல்

புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதைத் தடுப்பதன் மூலம் புவி வெப்பமடைதளைக் குறைக்க 2 ட்ரில்லியன் டாலர் உந்துதலை பைடன் முன்மொழிகிறார். இது நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள், வாகனங்கள், வெகுஜன போக்குவரத்து அமைப்புகள் மற்றும் கட்டிடங்களை அதிக எரிபொருள் திறன் கொண்டதாகவும் எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரியைச் சார்ந்து இருப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தடையை ஆதரிக்கவில்லை என்று பைடன் கூறினாலும், கூட்டாட்சி நிலங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்திக்கான புதிய அனுமதிகளைத தனது நிர்வாகம் தடை செய்யும் என்று கூறுகிறார்.

ட்ரம்பின் நிர்வாகம் மாசுபடுத்துபவர்களுக்கு எதிரான அமலாக்கத்தின் மந்தநிலையை மாற்றியமைக்கு பைடனின் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தளம் அழைப்பு விடுகிறது. இது பல வகைகளில் பல சகாப்தங்களாக மிகக் குறைந்த நிலைக்கு வந்துள்ளது. இது நீதித் துறைக்குள் ஒரு பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் நீதிப் பிரிவு போன்றவற்றை நிறுவுவதும் அடக்கியுள்ளது.

பைடன் சுற்றுச்சூழல் நீதியை வலியுறுத்துகிறார். இது குறைந்த வருமானம் மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு மாசுபடுத்தும் பெருநிறுவனங்கள் இழைக்கும் தீங்கினை சீர்செய்வதாகும். புதைபடிவ எரிபொருள் தொடர்பான தொழில்களைக் குறிவைத்து பருவநிலை வழக்குகளை ஆதரிப்பதாக பைடன் கூறுகிறார்.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதற்கான ட்ரம்பின் முடிவை மாற்றியமைப்பதாக அவர் கூறினார்.

கல்வி

பைடனுக்குக் கல்வி என்பது ஒரு குடும்ப விவகாரம் ஆகும். அவரின் மனைவி ஜில், உயர்நிலைப்பள்ளி மற்றும் சமுதாயக் கல்லூரியில் கல்வி கற்பித்தவர். 2020 ஆம் ஆண்டில் அவர் தனது பழைய வகுப்பறையில் இருந்து ஜனநாயக தேசிய மாநாட்டிற்குத் தனது உரையை நிகழ்த்தினார்.

பள்ளிகள் ஆசிரியர்களுக்கு போட்டி ஊதியம் மற்றும் சலுகைகளை வழங்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் குறைந்த வருமானம் கொண்ட பொதுப் பள்ளிகளுக்கான கூட்டாட்சி தலைப்பு 1 திட்டத்தை மூன்று மடங்காக உயர்த்துவதற்கு பைடன் முன்மொழிந்தார். இலாப நோக்குடன் செயல்படும் பட்டயப் பள்ளிகளுக்கு கூட்டாட்சிப் பணத்தைத் தடை செய்யவும், தேவைப்படும் மாணவர்களுக்குச் சேவை செய்ய முடியும் என்பதைக் காட்டினால் மட்டுமே புதிய டாலர்களை பொது பட்டயங்களுக்கு வழங்கவும் அவர் விரும்புகிறார். வவுச்சர் திட்டங்களை அவர் எதிர்க்கிறார். அங்கு பொதுப் பணம் தனியார் பள்ளி கல்விக்கு செலுத்தப் பயன்படுகிறது.

ட்ரம்ப் நிர்வாகத்தால் திரும்பப் பெறப்பட்ட ஒபாமா காலக் கொள்கைகளை மீட்டெடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். இதில் வளாகத்தில் பாலியல் முறைகேடு தொடர்பான விதிகள், மாணவர்கள்மீது அதிக கடன் சுமையும் மற்றும் அந்தக் கடனை அடைக்க இயலாதபடி வேலை கிடைக்காமல் போகச் செய்து இலாப நோக்குடன் செயல்படும் கல்லூரிகளுக்கு கூட்டாட்சி பணத்தைக் குறைக்கும் கொள்கை போன்றவற்றை நோக்கமாகக் கொண்டது.

இரண்டு வருட சமுதாயக் கல்லூரியை இலவசமாக்குவதற்கும், 125,000 டாலருக்கும் குறைவான வருமானம் உள்ள குடும்பங்களுக்கு பொதுக் கல்லூரிகளை இலவசமாக்குவதற்குமான சட்டத்தை பைடன் ஆதரிக்கிறார். அவரால் முன்மொழியப்பட்ட மாணவர் கடன் மறுசீரமைப்பின்படி ஆண்டுக்கு 25,000 டாலருக்கும் குறைவாக சம்பாதிக்கும் நபர்கள் அக்கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லை. மேலும் மற்றவர்களுக்கு விருப்ப வருமானத்தில் 5 சத விகிதம் வரை கொடுப்பனைவுகளை மட்டுப்படுத்தும்.

வரலாற்று ரீதியாக கறுப்புக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கும் குறைவான மாணவர்களுக்குச் சேவை செய்யும் பிற பள்ளிகளுக்கும் 70 பில்லியன் டாலர் நிதியுதவி அதிகரிக்க அவர் முன் மொழிகிறார்.

கருக்கலைப்பு

பைடன் கருக்கலைப்பு உரிமைகளை ஆதரிக்கிறார். மேலும் ரோய். வி. வேடை ஆதரிக்கும் கூட்டாட்சி நீதிபதிகளை பரிந்துரைப்பேன் என்று கூறியுள்ளார்.

ட்ரம்பின் குடும்பக் கட்டுப்பாடு விதியை அவர் ரத்து செய்வார். இது பல கிளினிக்குகள் குறைந்த வருமானம் கொண்ட பெண்களுக்கு பிறப்புக் கட்டுப்பாடு மற்றும் அடிப்படை மருத்துவ சேவைகளை வழங்கும் கூட்டாட்சி தலைப்பு எக்ஸ் திட்டத்தைவிட்டு வெளியேறத் தூண்டியது.

தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து ஒரு மாற்றமாக, பைடன் இப்போது ஹைட் திருத்தத்தை “ரத்து செய்வதை“ ஆதரிப்பதாகக் கூறுகிறார். இதன் மூலம் மருத்துவ உதவி போன்ற கூட்டாட்சித் திட்டங்கள் கருக்கலைப்புகளுக்கு பணம் செலுத்த வழி வகுக்கிறார்.

சமூகப் பாதுகாப்பு

பைடன் ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தைக் கொண்டுள்ளார். இது பலன்களை விரிவுபடுத்துகிறது. உயர் வருமானம் உடையவர்களுக்கு வரிகளை உயர்த்துகிறது. மேலும் சில வருட தீர்வுகளையும் சேர்க்கிறது.

சமூகப் பாதுகாப்பின் வருடாந்திர வாழ்க்கைச் செலவு சரிசெய்தலை பணவீக்கக் குறியீட்டுடன் இணைப்பதன் மூலம் அவர் அதை மறு சீரமைப்பார். இது வயதானவர்களுக்கான, குறிப்பாக சுகாதாரப் பாதுகாப்பு செலவுகளில் ஏற்படும் மாற்றங்களை மிக நெருக்கமாக பிரதிபலிக்கிறது. இது வக்கீல்களுக்கு முன்னுரிமையானதாகும். குறைந்த வருமானம் கொண்ட ஓய்வுபெற்றவர்களுக்கு குறைந்தபட்ச சலுகைகளையும் அவர் அதிகரிப்பார். முதியோர் மத்தியில் நிதி நெருக்கடிகளை நிவிர்த்திச் செய்வார்.

பைடன் ஒரு வருடத்திற்கு 400,000 டாலருக்கும் அதிகமான வருவாய்க்கு உதிய வரியைப் பயன்படுத்துவதன் மூலம் சமூகப் பாதுகாப்பு வரிகளை உயர்த்துவார். 12.4% வரி, ஊழியர்கள் மற்றும் முதலாளிகளிடையே சமமாக விநியோகிக்கப்படுகிறது. தற்போது ஒரு நபரின் வருவாயில் முதல் 137,700 க்கு மட்டுமே பொருந்தும். வரி அதிகரிப்பு பைடனின் முன்மொழியப்பட்ட நன்மை விரிவாக்கங்களுக்கு செலவு செய்ய பயன்படும். மேலும் இது நிதி நிறுவனத்தின் ஆயுளை ஐந்து ஆண்டுகளாக 2040க்கு நீட்டிக்கும் என்று பாரபட்சமற்ற நகர நிறுவனம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிகள்

கூட்டாட்சி உரிமம் பெற்ற வியாபாரிகளிடமிருந்து மக்கள் துப்பாக்கிகளை வாங்கும்போது இப்போது பயன்பாட்டில் உள்ள பின்னணி சோதனை முறையை நிறுவ ஒரு செனட்டராக பைடன் தலைமை தாங்கினார். கிளின்டன் அதிபர் காலத்தில் அரை தானியங்கி துப்பாக்கிகள் அல்லது “தாக்குதல் ஆயுதங்கள்“ மீது 10 ஆண்டு தடையை நிறைவேற்றவும் அவர் உதவினார்.

தாக்குதல் ஆயுதங்கள் மற்றும் அதிக திறன் கொண்ட குண்டுகள் தயாரித்தல் மற்றும் விற்பனை செய்தலுக்கு மற்றுமொரு தடையைக் கோருவதாக பைடன் உறுதியளித்துள்ளார். உரிமையாளர்கள் தற்போதுள்ள தாக்குதல் ஆயுதங்களை ஆல்கஹால், புகையிலை, துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுக்கான பணியகத்தில் பதிவு செய்ய வேண்டும். தாக்குதல் ஆயுதங்களை வாங்குவதற்கான ஒரு திட்டத்தையும் அவர் ஆதரிக்கிறார்.

ஒரு நபர் ஒரு மாதத்திறக்கு வாங்கக்கூடிய துப்பாக்கிகளின் எண்ணிக்கையை ஒன்றுக்குக் கட்டுப்படுத்தும் சட்டத்தை பைடன் ஆதரிக்கிறார். மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கிடையேயான பரிசுகள் போன்ற வரையறுக்கப்பட்ட விதிவிலக்குகளுடன் அனைத்துத் துப்பாக்கிகள் விற்பனைக்கும் பின்னணி சோதனை தேவைப்படும்.

துப்பாக்கிகள், வெடி மருந்துகள், கருவிகள் மற்றும் துப்பாக்கி பாகங்கள் அனைத்தையும் ஆன்லைனில் விற்பனை செய்தவதைத் தடை செய்யும் சட்டத்தையும் பைடன் ஆதரிக்கிறார்.

படைவீரர்கள்

ஒவ்வொரு படைவீரர் விவகார மருத்துவ மையத்திலும் குறைந்தது ஒரு முழநேர பெண்களின் முதன்மை பராமரிப்பு மருத்துவரை வைப்பதன் மூலம் இராணுவத்தில் வேகமாக வளர்ந்து வரும் துணைக்குழுவான பெண்களுக்கான சுகாதார சேவைகளை மேம்படுத்தி காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று பைடன் கூறுகிறார்.

அதிர்ச்சிகரமான மூளைக் காயம் மற்று நச்சு வெளிப்பாடுகளின் தாக்கத்தை நன்கு புரிந்துகொள்ள 300 மில்லியன் டாலர்களை வழங்குவதாக அவர் உறுதியளிக்கிறார். அதிகமான வி.ஏ. பணியாளர்களை வேலையில் அமர்த்தி காத்திருப்பு நேரத்தைக் குறைத்து வீரர்களின் தற்கொலை அபாயத்தை பூஜ்யமாக்கி, மேலும் வீடற்ற நிலையினை ஒழிக்க ஒபாமா-பைடன் நிர்வாகத்தை மேற்கொள்வதாக உறுதியளிக்கிறார்.

வியாபாரம்

ட்ரம்பைப் போலவே, பைடனும் சீனா சர்வதேச வர்த்தக விதிகளை மீறுவதாகவும், அதின் நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவதாகவும், அமெரிக்க அறிவுசார் சொத்துக்களைத் திருடியதாகவும் குற்றம் சாட்டுகிறார். ஆனால், ட்ரம்பின் கட்டணங்கள் செயல்பட்டதாக அவர் நினைக்கவில்லை. பெய்ஜீங்கிற்கு எதிராக ஒரு அரணை உருவாக்க யு.எஸ். கூட்டாளிகளுடன் சேர விரும்புகிறார்.

பைடன் வெளிநாடுகளில் வளர்ந்து வரும் இருதரப்பு “நியாயமான வர்த்தகத்தை“ இணைத்துக் கொள்கிறார். இது குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயக நிர்வாகம் இணைந்து சர்வதேச வர்த்தக விரிவாக்கம் குறித்த பல சகாப்தங்களின் “சுதந்திர வர்த்தக“ பேசுக்கான ஒரு திருப்பம் ஆகும்.

நான்கு வருட காலக் கட்டத்தில் 400 பில்லியன் டாலர்களை கூட்டாட்சி அரசின் கொள்முதல் மூலம் உள்நாட்டு கம்பெனிகளுக்கு ஒதுக்க விரும்புகிறார். இதில் தொற்றுநோய்க்கான பொருட்களின் விநியோகமும் ஒரு பகுதியாகும்.

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான புதிய ஆதரவாக 300 பில்லியன் டாலர் அளிக்க விரும்புகிறார். எந்தவொரு புதிய சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களில் நுழைவதற்கு முன் புதிய உள்நாட்டு செலவினம் முன்னுரிமை பெறவேண்டும் என்று பைடன் கூறுகிறார்.

வர்த்தக மற்றும் அறிவுசார் சொத்து விஷயங்களின் உலகின் பிற பொருளாதார வல்லரசான சீனாவுடன் கடுமையான பேச்சு வார்த்தைகளுக்கு அவர் உறுதியளிக்கிறார். சீனாவும், அமெரிக்கா போலவே இன்னும் டிரான்ஸ்-பசிபிக் கூட்டாண்மையில் உறுப்பினராக இல்லை. இது பைடன் துணைத் தலைவராக இருந்தபோது வாதிட்ட பலதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஆகும். ஒரு செனட்டராக, ட்ரம்ப் நிரவாகம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திய வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு பைடன் வாக்களித்தார். மாற்றீடு ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.