ETV Bharat / opinion

இடதுசாரி, திரிணாமுல் காங்கிரஸ், பாஜக மற்றும் மேற்கு வங்காளத்தின் தொழில் புதிர்

author img

By

Published : Mar 1, 2021, 10:51 PM IST

பாரதீய ஜனதா கட்சியின் தயவினால், தொழில்மயமாதல் என்னும் பிரச்சினை மீண்டும் வந்து இப்போது மேற்கு வங்காளத்தின் தேர்தல் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது. 2011-ல் புத்ததேவ் பட்டாச்சார்ஜிக்கும் மம்தா பானர்ஜிக்கும் இடையே கடுமையான ஒரு யுத்தம் நடந்தது. இப்போது, நரேந்திர மோடிக்கும் மம்தா பானர்ஜிக்கும் போர் நடக்கிறது. தங்கள் தங்கள் இலக்குகளைக் குறிபார்த்து அடிக்க, திரிணாமுல் காங்கிரஸும் பாஜகவும் மீண்டும் ஹூக்ளியைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. சிங்கூரைக் கொண்ட அதே ஹூக்ளி மாவட்டத்தைத்தான்.

Etv - Bharat
மேற்கு வங்கம்

டாட்டா மோட்டார்ஸ் மேற்கு வங்காளத்தை விட்டு ஓடிப்போய் சுமார் 11 வருடங்கள் கடந்த பின்னும், தொழிலுக்கு எதிரானது என்ற பிம்பத்தை அந்த மாநிலத்தால் இன்னும் விட்டொழிக்க முடியவில்லை. மாநில அரசு பல்வேறு விதமான தொழில் கூட்டங்களை நடத்துகிறது என்பதே உற்பத்தித் துறை சம்பந்தமான தனது எதிர்மறைப் பிம்பத்தை வங்காளத்தால் இன்னும் உடைக்க முடியவில்லை என்பதற்குச் சாட்சியாக இருக்கிறது. கடந்த பத்து வருடங்களாக மம்தா பானர்ஜியின் அரசு நடத்தும் வங்காள உலகத் தொழில் உச்சி மாநாடுகள் எந்தவொரு முன்னோக்கிய தொழில் நகர்வையும் ஏற்படுத்தவில்லை. தொழில் துறைக்கு நட்பான சூழல் மேற்கு வங்காள மாநிலத்தில் நிலவுகிறது என்பதைக் காட்டுகின்ற வண்ணம் மாநில அரசு புள்ளி விவரங்களையும் தரவுகளையும் எடுத்து வீச அதிகப் பிரயத்தனங்கள் செய்த போதிலும், அவற்றை எல்லாம் கேள்விக்குள்ளாக்கும் பல்வேறு குரல்கள் அரசுக்குள்ளிருந்தே ஒலிக்கின்றன.

தடுக்கப்பட்ட தொழில்மயமாதல் இலட்சியம் என்ற அதே பிரச்சினை இப்போது மேற்கு வங்காளத்தில் மீண்டும் எதிரொலிக்கிறது. இம்முறை அதைக் கையில் எடுத்திருப்பது மத்தியில் ஆளும் பாஜக. தொழிமயமாதல் பிரச்சினையின் துண்டுகளை எல்லாம் எடுத்து ஒன்றாய்க் கோர்த்து ‘போரிபார்ட்டனர் போரிபார்ட்டன்’ (மாற்றத்தை மாற்றுதல்) என்ற முழக்கத்தை அந்த மாநிலத்தில் நூற்றுக் கொண்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. பாஜக ஆட்சிக்கு வந்தால், தொழில்களின் புத்துணர்வுக்கான சாதகமான சூழல் மாநிலத்தில் உருவாக்கப்படும்; இளைஞர்களுக்கு வேலை கிட்டும்; புதிய வங்காளம் உதயமாகும். இதுதான் அவரது தேர்தல் வாக்குறுதி. இதுதான் பாஜகவின் தேர்தல் முழக்கம்.

புத்ததேவ் பட்டாச்சார்ஜி இரண்டாம் தடவையாக முதல் மந்திரியாக ஆட்சி செய்த காலத்தில்தான் மாநிலத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஓடியாடித் திரிகின்ற ஓர் உத்வேகமான முதல்வரை அந்த மாநிலம் கண்டது. பல்வேறு மாநிலங்களுக்கு, வெளிநாடுகளுக்கும் கூட அவர் அடிக்கடி விஜயம் செய்தார், மேற்கு வங்காளத்தில் தொழில்களுக்கு ஓர் உத்வேகத்தைக் கொடுப்பதற்காக. இரண்டே இரண்டு வார்த்தைகள்தான் அப்போது மாநிலத் தலைமைச் செயலகமாக இருந்த எழுத்தாளர் மாளிகையில் ஒலித்துக் கொண்டே இருந்தன: தொழில்கள் மற்றும் முதலீடு.

ஆனால் நிஜம் வேறாக இருந்தது. பட்டாச்சார்ஜியின் கனவுகள் மெய்ப்படவே இல்லை. பெரிய தொழில்கள் ஏதும் உருவாகவில்லை. சிங்கூர், நந்திக்கிராம் காயங்களைத் தாங்கிக் கொண்டே புத்ததேவ் பட்டாச்சார்ஜி காணாமல் போக வேண்டியதாயிற்று. இடதுசாரி முன்னணி மெல்ல மெல்ல அரசியல் வரலாற்றுப் பக்கங்களில் தடம்தெரியாமல் பின்னுக்குச் சென்றது.

மேற்கு வங்காளத்தில் இடதுசாரிக்கு இருந்த தொழிலுக்கு எதிரான கட்சி என்ற அடையாளத்தைத் துடைத்தெறிய பட்டாச்சார்ஜி விரும்பினார். ’விவசாயம் நமது அஸ்திவாரம்; தொழில் நமது எதிர்காலம்’ என்பதை மக்களும் தனது கட்சியும் புரிந்துகொள்ள வேண்டுமென்று அவர் விரும்பினார். ஆனால் அவரது திட்டத்தில் அவர் தோற்றுப் போனார். நிஜத்தில் அவரது திட்டம் சுவற்றில் அடித்த பந்து திருப்பி வந்து தாக்குவதைப் போலாயிற்று. ‘சிகப்புப் புதிர்ச்சிக்கல் கட்டமைப்பில் மாட்டிய தளபதி’ என்று சொல்வார்களே அப்படியொரு தளபதியானார் பட்டாசார்ஜி.

(கார்சியாவின் 1989-ஆம் ஆண்டு கொடுங்கோலன் புதினம் ‘புதிர்ச்சிக்கல் கட்டமைப்பில் ஒரு தளபதி’ – தெ ஜெனரல் இன் ஹிஸ் லாபிரிந்த்).

2011-ல் ’போரிபார்ட்டன்’ (மாற்றம்) என்ற பிரபலமான முழக்கத்தை முன்வைத்த பின்னர் மம்தா பானர்ஜியும் மேற்கு வங்காளத்தில் தொழில்களை நிர்மாணிப்பதைப் பற்றிப் பேசினார். உச்சி மாநாடுகள், கூட்டங்கள், விவாத மேடைகள், விஜயங்கள், நிகழ்வுகள் என்று ஏராளமானவை அரங்கேறிக் கொண்டே இருந்தன. ஆனால் இந்த உத்வேகமான முனைப்புகளால், முயற்சிகளால் கடந்த பத்து ஆண்டுகளில் எத்தனை தொழில்கள் உருவாகின அல்லது எத்தனை பேருக்கு வேலை கிடைத்தன என்பதை ஒருவர் ஊகிக்கத்தான் வேண்டும்.

டாட்டாக்கள் சிங்கூரை விட்டுப் போனபின்பு விவசாயிகள் தங்கள் நிலங்களைத் திரும்பப் பெறுவார்கள் என்று மம்தா பானர்ஜி வாக்குறுதி கொடுத்திருந்தார். கடுமையான சட்டத் தடைகளுக்கும், இடைஞ்சல்களுக்கும் பின்புதான் விவசாயிகளால் தங்கள் நிலங்களைப் பெற முடிந்தது. நிலங்கள் என்னமோ கிடைத்து விட்டது. ஆனால் அதற்குள் சிங்கூரில் இருந்த நிலங்களின் தன்மை நிரந்தரமாக மாறிவிட்டது. இப்போது அந்த நிலங்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று விவசாயிகள் ஒன்றும் தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வரலாற்றுப் பின்னணியில்தான் மீண்டும் அந்தக் குரல் கேட்கிறது. தொழில்மயமாக்குவோம் என்ற குரல். இந்தத் தடவை மூன்றாவது அமைப்பிலிருந்து வருகிறது அந்தக் குரல்; அதாவது, பாஜக-விடமிருந்து.

தேர்தல் முடிவுகளில் மாற்றம் இருந்தாலும் எதிர்காலத்தில் தொழில் என்று ஏதேனும் ஒன்று மேற்கு வங்காளத்தில் உருவாகுமா என்பதுதான் இயல்பானதோர் கேள்வி. காவிக்கட்சி ஆதரவாளர்கள் ’ஆமாம், உருவாகும்’ என்கிறார்கள். அவர்கள் காட்டும் உதாரணம் குஜராத். முன்பு யாரை முதல்வராகக் கொண்டிருந்து பின்பு அவரை பிரதம அமைச்சராக்கி அனுப்பியதோ அதே மாநிலம்தான். தொழில்முனைவோர்களையும், தொழிலதிபர்களையும் விரட்டி அடிக்காத மாநிலம் குஜராத். அந்த முன்மாதிரியின் அடிப்படையில்தான் தனது தொழில் கனவை மேற்கு வங்காளப் பூமியில் விற்பதற்குத் தேர்தலுக்கு முன்பாக வந்திருக்கிறார் நரேந்திர மோடி.

ஆனால் விலைபோகுமா அவரது கனவுப் பொருள்? சுலபமான வேலையா என்ன?

இதற்கான பதில் மேற்கு வங்காளத்தில் இயல்பிலே இருக்கும் நிலவுடமை அமைப்பில்தான் இருக்கிறது. கொத்துக் கொத்தான பெரிய நிலங்கள் அந்த மாநிலத்தில் ஒரே இடத்தில் கிடைப்பது கிட்டத்தட்ட அசாத்தியமானது என்று பல வல்லுநர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்த நிஜத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது உற்பத்தித்துறைதான். டாட்டாக்கள் மட்டுமல்ல, லார்சன் அண்ட் டூப்ரோவும் பெரிய பெரிய நிலங்கள் கிடைக்காததினால் மின்நிலையம் கட்டும் தனது திட்டத்திலிருந்து பல்டி அடித்து ஓடிவிட்டது. நிலங்களைத் தொழில்களுக்காகக் கையகப்படுத்துவதில்லை என்பது திரிணாமுல் காங்கிரஸ் அரசின் நிலைப்பாடு வேறு. நிலச் சீர்திருத்தங்களுக்கு அப்புறம், மாநில அரசு நிலங்களைத் தொழில்களுக்காகக் கையகப்படுத்துவதில்லை என்ற தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் மேற்கு வங்காளத்தில் பெரிய தொழில்களை நிர்மாணிப்பது நடைமுறையில் சாத்தியமே இல்லை என்று சுட்டிக் காட்டிய நிபுணர்கள், பின் எப்படி முதலீட்டாளர்களைக் கவர்ந்து உள்ளே கொண்டு வருவது என்று கேள்வியும் எழுப்பி உள்ளனர்.

மேற்கு வங்காளத் தேர்தலில் ஒருவேளை திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் வென்று ஆட்சியைப் பிடித்தால், தொழில்களுக்காக நிலங்களைக் கையகப்படுத்துவதில் இப்போது இருக்கும் சிக்கல்கள் அப்போதும் தொடரும். பாஜக மம்தாவை வென்று விட்டாலும் கூட, எல்லாம் ஒரே இரவில் தலைகீழாக மாறிவிடுமா? இந்தப் பிரச்சினையில் பாஜகவினர் உத்வேகத்தையும் உறுதியையும் காண்பிப்பார்களா?

மேற்கு வங்காளத்தில் அவசர அவசரமாக காரியங்களைச் செய்தால் என்ன பின்விளைவுகள் உண்டாகும் என்பதை புத்ததேவ் பட்டாச்சார்ஜிக்கு நேர்ந்த அரசியல் விதி எப்போதும் ஞாபகப் படுத்திக் கொண்டே இருக்கிறது. நிச்சயமாக பாஜக அந்தப் பாதையில் நடை போடாது என்பது வெளிப்படை. அப்படியென்றால், மோடி-ஷாவின் இந்தத் தொழில்மயமாக்கல் என்னும் தாரகமந்திர கோஷம் என்னவாகும்? எப்போதுமே அரசியலுக்குப் பயன்படும் சூடான பிரச்சினை என்ற அளவிலே இறுதியில் அது ஒரு புதிராகவே மாறிவிடுமா? இந்தக் கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கும், நீண்ட காலமல்ல, கொஞ்சகாலம் பொறுத்து.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.