ETV Bharat / opinion

திறன் மேம்பாடு இலக்கை அடைவது மிகப்பெரிய சவால்

author img

By

Published : Jan 17, 2021, 7:45 PM IST

அண்மையில் நடந்த அசோசாம் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்குமார் சிங், முதல் இரண்டு கட்டங்களில் கவுசல் விகாஸ் திட்டத்தின் 90 லட்சம் பயனாளிகள் பயன்பெற்றதாகவும், திறன் மேம்பாட்டில் பயிற்சி பெற்ற பின்னர் 30-35 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைத்தது என்றும் ஒப்புக்கொண்டார்.

மோடி
மோடி

இந்தியாவை திறமையான மனித வளங்களின் தலைநகராக மாற்றுவதற்கான நோக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 2015ஆம் ஆண்டு, கவுசல் விகாஸ் யோஜனாவை தொடங்கினார். அப்போது, அமைச்சர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 24 லட்சம் பேருக்கு ரூ.1500 கோடி செலவில் பயிற்சி அளிக்கப்படும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டனர்.

இரண்டாம் கட்டமான 2016-2020 காலகட்டத்தில், ரூ. 12,000 கோடி செலவில் சர்வதேச தரத்திற்கு ஏற்ப திறன் மேம்பாட்டு பயிற்சியை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டது. இதற்கிடையே, கவுசல் விகாஸ் யோஜனாவின் மூன்றாம் கட்டம் நேற்று தொடங்கியது. முதல் இரண்டு கட்டங்களில் பெறப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் மூன்றாம் கட்டம் திட்டமிடப்பட்டுள்ளது என்றும், கோவிட்-19 தொற்றுநோயின் விளைவாக ஏற்பட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ப இந்த கட்டம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், முதல் இரண்டு கட்டங்களில் என்ன அனுபவம் பெறப்பட்டது என்ற பெரிய கேள்வி எஞ்சியுள்ளது

அண்மையில் நடந்த அசோசாம் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்குமார் சிங், முதல் இரண்டு கட்டங்களில் கவுசல் விகாஸ் திட்டத்தின் 90 லட்சம் பயனாளிகள் பயன்பெற்றதாகவும், திறன் மேம்பாட்டில் பயிற்சி பெற்ற பின்னர் 30-35 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைத்தது என்றும் ஒப்புக்கொண்டார். இந்த யோஜனாவின் கீழ் 72 லட்சம் பயனாளிகள் மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களில் 15 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைத்தது என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கு ரூ .6000 கோடி மட்டுமே செலவிடப்பட்டதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது சொல்லுக்கும் செயலுக்கும் இடையிலான இடைவெளியை தெளிவாகக் காட்டுகிறது.

மூன்றாம் கட்டமாக 600 மாவட்டங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதில் ரூ.948 கோடி செலவில் 8 லட்சம் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேகத்தில் சென்றால் 40 கோடி மக்களை திறமையான நபர்களாக மாற்றும் இலக்கை நாம் எப்போது அடையப் போகிறோம்? பயிற்சியின் வழிகாட்டுதல்கள் மற்றும் அதன் முடிவுகளை அறிவிக்கும் முறை குறித்து சாரதா பிரசாத் குழு கேள்வி எழுப்பியுள்ளதால், வேலைக்கு ஏற்ப மனித வளங்களை உருவாக்குவதற்கான பயிற்சியை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும்

இந்தப் பின்னணியில், ஒரு ஜப்பானியரின் சராசரி வயது 48 ஆண்டுகள், ஒரு அமெரிக்கர் 46, ஐரோப்பியர் 42. ஆனால் சராசரி இந்தியர் வயது 27 ஆண்டுகள் என்பதைக் குறிப்பிட வேண்டும். இந்திய மக்கள்தொகையில் சுமார் 62 விழுக்காடு மக்கள் 15 முதல் 59 வயது வரை உள்ளவர்கள் என்பது நாட்டின் இயற்கையான வலிமையைக் குறிக்கிறது. இந்தியாவில் அதிக மனித வளங்கள் இருந்தாலும், திறன் தொழிலாளர்களின் கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக பல நிறுவனங்கள் புலம்புகின்றன.

மறுபுறம், முனைவர் பட்டம் பெற்றவர்கள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் கூட சாதாரண வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் ஒரு முரண்பாடான சூழ்நிலையை நாம் காண்கிறோம். இதுபோன்ற நிலைமையில் மனித வளங்களை பெருமளவில் வீணாவதைத் தவிர்ப்பதற்கான திட்டத்தை கொண்டுவர வேண்டிய அவசியம் உள்ளது. திறன் மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட அமைச்சர் திறன் மேம்பாட்டு பயிற்சியாளர்களுக்கு தனி பட்டப்படிப்பு இருக்க வேண்டும் என்றும், இதற்காக ஒரு தனி நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என்றும் கூறினார். ஆனால் அந்த திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.

கோவிட்-19 நெருக்கடி உலகெங்கிலும் உள்ள பல்வேறு துறைகளை பாதித்துள்ளதால், மாறிவரும் சூழ்நிலைகளில் தொழில் மற்றும் சேவைத் துறைகளின் தேவைகளுக்கு ஏற்ப நமது இளைஞர்களை உருவாக்குவது மிகப்பெரிய சவால். வரவிருக்கும் காலங்களில், செயற்கை நுண்ணறிவுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும், மேலும் மக்களின் வாழ்க்கை முறையும் பெரிய அளவில் மாறும் என்பதால், வேலைகளின் தன்மை அதற்கேற்ப மிகப்பெரிய மாற்றத்திற்கு ஆளாகும். பாடத்திட்டங்கள் மாற்றங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட வேண்டும். ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதும் அவர்களுக்கான பயிற்சியும் அதற்கேற்ப மேற்கொள்ளப்பட வேண்டும். இவற்றை செயல்படுத்த விரைவாக ஒரு சுதந்திரமான அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

தனது ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த தொழில்துறை எண்ணற்ற முயற்சிகளை மேற்கொள்கிறது. வளாகத்திலிருந்தே தகுதியான நபர்களை தொழிற்துறைகள் தேர்ந்தெடுப்பதற்கு ஏற்றவாறு பயனுள்ள கல்வி அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இதன்மூலம் கோடிக்கணக்கான இளைஞர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்க்கையின் செழிப்பிற்கும் உதவுவதற்காக இந்த முறை பின்பற்றப்பட வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.