ETV Bharat / opinion

தேசிய கல்விக் கொள்கை 2020 : இந்தியாவில் தரமான ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும்  கருவியாக இருக்கும் - ஆராய்ச்சியும் புதிய கல்விக் கொள்கை

தேசிய கல்விக் கொள்கை 2020இல் இடம்பெற்றுள்ள மாணவர்களின் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் அம்சங்கள் குறித்து ஹைதராபாத் பல்கலைக்கழக பேராசிரியர் அப்பா ராவ் பொடில் எழுதியிருக்கும் ஆய்வுக் கட்டுரையின் தமிழாக்கம்.

தேசிய கல்விக் கொள்கை
தேசிய கல்விக் கொள்கை
author img

By

Published : Aug 12, 2020, 3:53 PM IST

பன்னிரண்டு ஐந்து ஆண்டுத் திட்டங்களை (60 ஆண்டுகள்) நடைமுறைப்படுத்திய பின்னர் இந்திய அரசு அதன் பழைய திட்டக் கமிஷன் என்ற பெயரை NITI, ஆயோக் (கொள்கை ஆணையம்) என்று பெயர் மாற்றம் செய்த பிறகு, முதல் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவை மாற்றுவதற்கான பெரும் மாற்றங்களுக்கு மிகவும் பரிச்சயமானது.

தீவிரக் கண்காணிப்பு மற்றும் கிடைக்கக்கூடிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பொது செலவினங்களுக்கான பொறுப்புணர்வை நிதி ஆயோக் உருவாக்கியுள்ளது. இந்திய அரசின் திட்டங்களை டிஜிட்டல் முறையில் செயல்படுத்துவதோடு, பொதுப் பணத்தை செலவழிப்பதில் வெளிப்படைத்தன்மை, மற்றும் பொறுப்பை அதிகரிப்பதற்காக பொது நிதி மேலாண்மை அமைப்பை (PFMS) பயன்படுத்தி கண்காணித்தல் போன்றவை இதில் தவிர்க்க முடியாத மாற்றங்களாகியுள்ளன. இப்போது, ​​30 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை - 2020 (NEP), இந்தியக் கல்வியை அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புகள் மூலம் நாட்டின் தேவைகளை உலகளாவிய தரத்திற்கு மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கை -2020இல் பல புதிய கொள்கைகள், வழிகாட்டுதல்கள் இருந்தாலும், இந்தக் கட்டுரை ஆராய்ச்சி தொடர்பான கொள்கைகளைப் பற்றி மட்டுமே விவரிக்கிறது.

STEMஇல் இருக்கும் கவனம் STEAMக்கு மாற்றப்படும் :

கல்வியும் ஆராய்ச்சியும் எப்போதும் கைகோர்த்துச் செல்பவை. ஒரு நாடு தன்னிறைவு அடைய வேண்டுமெனில் ஆராய்ச்சிக்கு நிறைய விஷயங்கள் உள்ளன. மேலும் இந்தியாவின் ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டத்தைப் பற்றி பேசும்போது இது மிகவும் பொருத்தமானது. ஆராய்ச்சியில் செய்யப்படும் முதலீடுகள் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து அதிக வருவாயைக் கொடுக்கும். ஆராய்ச்சிக்கான செலவினங்களுக்கான முதலீட்டின் வருமானம் எப்போதும் அதிகமாக இருக்கும்.

இந்தியாவில் பள்ளி / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் உள்ள கலாச்சார, மொழியியல் மற்றும் சமூக-பொருளாதார பன்முகத்தன்மைக்கு இளம் தலைமுறையை தயார்படுத்துவதன் மூலமாக பல மாணவர்கள் நமது சமுதாயத்தை பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். மனிதநேயம் மற்றும் சமூக அறிவியலில் ஆராய்ச்சிக்கான தூண்டுதல் அத்தகைய தயார்படுத்துதல் மூலம் உருவாகி, ஆராய்ச்சி கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் பல்கலைக்கழகங்களில் செம்மைபடுத்தப்படுகிறது.

ஆனால், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) பாடங்களில் ஆராய்ச்சிகள் பெரும்பாலும் பல்கலைக்கழகங்களுக்கு வெளியே நடக்கிறது. பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒருபுறம் இந்தியாவின் விஞ்ஞானிகளுடனும், மறுபுறம் இந்தப் பாடங்களில் உலகளவில் முன்னணியில் உள்ளவர்களுடனும் போட்டியிடுகின்றனர். ஆண்டுதோறும் இளம் திறமைகயாளர்களின் வருகை அதிகரிப்பது என்பது பல்கலைக்கழகங்களுக்கு நன்மை பயக்கும்.

தேசிய கல்விக் கொள்கை-2020 பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி / என்.ஐ.ஐ.டி உள்ளிட்ட பல உயர் கல்வி நிறுவனங்கள் பல்வேறு பாடத்திட்டங்களை கொண்ட கல்வி நிறுவனங்களாக மாறுவதைக் காண விழைகிறது. புதிய கல்விக்கொள்கை, STEM பாடங்களுக்கு மட்டும் கவனம் செலுத்தும் உயர் கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சியை STEAM (கலைப்பாடங்களின் குறிப்பிடத்தக்க கூறுகளைக் உள்ளடக்கி) ஆக மாற்ற விரும்புகிறது. இந்தச் செயல்பாட்டின் மூலம் கலை, சமூக அறிவியலின் முக்கியத்துவத்தை பொதுவாக உலகத்திற்கும் குறிப்பாக இந்தியாவிற்கும் வலியுறுத்தும்.

தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை :

வளர்ந்த நாடுகளில் உள்ள சம காலத்தவர்கள் இந்தியாவில் ஆராய்ச்சி மீதான தனித்துவமான முதலீட்டு முறை குறித்து மேற்கொள்ளும் ஒரு ஆழ்ந்த பார்வையை பல இந்தியப் பேராசிரியர்கள் கவனிக்கின்றனர். 15,000க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி பெல்லோஷிப்கள் மற்றும் ஆயிரக்கணக்கான முனைவர் பெல்லோஷிப்கள் ஆகியவை இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன.

அதற்கும் மேலாக, பிரதமரின் ஆராய்ச்சி பெல்லோஷிப் (பி.எம்.ஆர்.எஃப்) திட்டத்தின் கீழ் கவர்ச்சிகரமான மற்றும் அதிக போட்டி நிறைந்த ஆராய்ச்சிக்கான பெல்லோஷிப்கள் நம்மிடம் உள்ளது. இந்தியாவில் திறமையான இளைஞர்களை ஈர்க்கவும் ஊக்குவிக்கவும், எந்தவொரு தடையும் இல்லாமல் அவர்கள் ஆராய்ச்சியை ஆர்வத்துடன் தொடரவும் ஆராய்ச்சி பெல்லோஷிப்கள் உதவுகின்றன.

உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கும் ஆராய்ச்சி ஆய்வகங்களில் உள்ள விஞ்ஞானிகளுக்கும் ஆராய்ச்சி மானியங்கள் தாராளமாக, (ஆராய்ச்சி மானியங்களுக்கான உலகளாவிய போட்டியுடன் ஒப்பிடுகையில்) நியாயமாக உயர் விகிதத்தில் வழங்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்ட சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்பட்ட உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வசதிகள் தாராளமாக வழங்கப்பட்டுள்ளது. தனிநபர் அல்லது குழு ஆராய்ச்சியாளர்களுக்கு நேரடியாக வழங்கப்படும் மானியங்கள் தவிர, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST), பயோடெக்னாலஜி துறை (DBT), இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR), அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR), பல்கலைக்கழக மானியக் குழு(UGC) போன்றவற்றின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இத்தகைய ஆதரவைப் பயன்படுத்துவதன் மூலம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் டெல்லி பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் போன்ற சில மத்திய அரசின் நிதியுதவி பெறும் உயர் கல்வி நிறுவனங்கள், சிறந்த கல்வி நிறுவனங்கள் (IoE) என்று அழைக்கப்படும் தர அந்தஸ்தைப் பெற தரமான ஆராய்ச்சி வெளியீட்டில் சிறந்து விளங்குகின்றன. இந்தப் பல்கலைக்கழகங்கள் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் மற்றும் சிறந்த கல்வி நிறுவன அந்தஸ்து பெற்ற IIT போன்ற தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ளும் முதன்மை கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இணைந்தன. ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களாக மாற இந்தியாவுக்கு இது போன்ற அதிகமான உயர் கல்வி நிறுவனங்கள் தேவைப்படுகின்றன என்பதை தேசிய கல்விக் கொள்கை-2020 தெளிவுபடுத்தியுள்ளது.

சிறப்பான மாணவர்களுக்கான பெல்லோஷிப் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் ஆராய்ச்சி மானியங்கள் போன்றவை இந்தியாவில் ஆராய்ச்சி கலாச்சாரத்தை வியத்தகு முறையில் மேம்படுத்தியுள்ளன. ஆராய்ச்சிக்கு செலவழிக்கும் வரி செலுத்துவோரின் பணத்திற்கு கூடுதல் பொறுப்புணர்வைக் கொண்டு வருவதற்கு தற்போதைய அணுகுமுறையில் சிறிய மாற்றங்கள் தேவைப்படுகிறது.

தேசிய கல்வி கொள்கை-2020 மூலம் வடிவமைக்கப்பட்ட தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (NRF), ஆராய்ச்சி வெளியீட்டின் தரத்தை உயர்த்துவதற்கான குறிக்கோளுடன் அதிகப்படியான வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறலின் அளவை அடைவதற்கான ஒரு முயற்சியாகக் காணலாம். ஆராய்ச்சி முன்னுரிமைகளை வடிவமைத்தல், தேசிய தேவைகளை அடையாளம் காண்பது, உலகளாவிய தரத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஆராய்ச்சியாளர்களை ஆதரிப்பது மற்றும் ஆராய்ச்சி நிதியைப் பெறும் தனி நபர்கள் அல்லது குழுக்களின் செயல் திறனைக் கண்காணிப்பது போன்ற பணிகளை NRF மேற்கொள்ளும். நாட்டில் ஆராய்ச்சி சூழலின் அமைப்பை மாற்றுவதற்கான ஒரு கருவியாக தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

ஆராய்ச்சி கலாச்சாரத்தை மேம்படுத்த உதவும் :

1000க்கும் மேற்பட்ட உயர் கல்வி நிறுவனங்களைக் கொண்ட நாட்டில், அவற்றில் அதிகமானவற்றை ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களாகத் மாற தகுதி பெற்றவையாக நாம் கொண்டிருக்க வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருவருக்கொருவர் கவனமாக உத்திகளை வகுத்து ஒருவருக்கொருவர் தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை பூர்த்தி செய்யும் பகுதிகளை அடையாளம் காண வேண்டும்.

ஆராய்ச்சி நெறிமுறைகளில் சமரசம் செய்யாமல் உயர்தர ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக மத்தியப் பல்கலைக்கழகங்களின் வெற்றிகரமாக கட்டமைக்கப்பட்ட திட்டங்களை மத்திய அரசு தன் பங்கிற்கு உருவாக்க வேண்டும். பொது நிறுவனங்களில் உள்ள சிக்கல்கள் மற்றும் செயலற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, நிரந்தர வேலைவாய்ப்பைக் கொடுக்கும் ஒரு திட்டமானது பொறுப்பு மற்றும் பொறுப்புணர்வை உருவாக்கும் திட்டமாக மாற வேண்டும். இது ஐந்து அல்லது ஏழு வருட காலத்திற்கு தற்காலிக சேவைகளில் பணியமர்த்தப்படும் தொழில் வல்லுநர்களிடம் கிடைக்காது.

குறைந்தபட்ச வெளியீடு தேவைப்படும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க உத்தரவாதமளிக்கும் முன்மாதிரியாக இருக்கலாம். இத்தகைய முன்மாதிரியானது இந்திய அறிவியல் நிறுவனம் மற்றும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER) ஆகியவற்றின் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்பதற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுகின்றன. அதே நேரத்தில், உயர் கல்வி நிறுவனங்கள் ஆரோக்கியமான ஆராய்ச்சி கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது என்பதை உறுதிப்படுத்துவதும் முக்கியம்.

நல்ல ஆராய்ச்சி, கேள்விகளைக் கேட்பதை ஊக்குவிக்கும் ஒரு கலாச்சாரம், அதிகரிக்கும் அல்லது பாதிக்கும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் ஒரு கலாச்சாரம், இளைஞர்களுக்கு தொடக்க மானியங்களை வழங்கும் ஒரு கலாச்சாரம், ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் ஒரு கலாச்சாரம், ஒன்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக்கு உதவும் ஒரு கலாச்சாரம், பெரிய கேள்விகளை எதிர்கொள்ள ஆராய்ச்சியாளர்களை அனுமதிக்கும் ஒரு கலாச்சாரம் போன்றவை மூலம் உலக அளவில் இந்தியா போட்டியிட, மேலும் அதிகமான உயர் கல்வி நிறுவனங்களில் கட்டமைக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டும்.

அதிக எண்ணிக்கையில் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்கள், முற்றிலும் மாறுபட்ட சிக்கல்களை எதிர்கொள்கின்றன. பெரும்பாலான மாநிலப் பல்கலைக்கழகங்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட மிகக் குறைந்த வளங்களைக் கொண்டு மிக அதிக அளவிலான இளைஞர்களை எதிர்கொள்கின்றன. 10 முதல் 20 ஆண்டுகள் இடைவெளியில் எப்போதாவது நடக்கும் ஆசிரியர்கள் நியமனம், ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளை குறைக்கிறது. பல வளாகங்கள் ஆராய்ச்சியைப் பற்றி சிந்திக்க போதுமான உள்கட்டமைப்பு இல்லாததால் பாதிக்கப்படுகின்றன. இது போன்ற நிலைமை இளம் ஆராய்ச்சியாளர்களை தங்கள் ஆராய்ச்சி இலக்குகளைத் அடைய அங்குமிங்கும் அலைய வைக்கிறது.

தடையற்ற இணைய சேவைகளை விடுங்கள், ஒரு சில வளாகங்களில் நீர் மற்றும் மின்சாரம் கூட தடையின்றி கிடைப்பதில்லை. ஒரு ஆராய்ச்சி கலாச்சாரத்தை கட்டியெழுப்பவும் பராமரிக்கவும் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களாக அந்தஸ்தைப் பெற போட்டியில் இருக்க வேண்டுமானால் பல்கலைக்கழக வளாகங்களை புத்துயிர் பெற பல மாநில அரசுகள் தங்களை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. மாநிலப் பல்கலைக்கழகங்கள் பின்பற்றுவதற்கான முன்மாதிரியாக அண்ணா பல்கலைக்கழகம், புனேவின் சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம் போன்றவை உள்ளன.

கல்வி என்பது பாடமாக இருந்தாலும், ஆராய்ச்சிகள் மூலமாக தேசத்தை கட்டமைப்பதற்கான கனவுகளை நனவாக்கவும், உள்ளூர் தேவைகளுக்கு பயன்படக்கூடிய ஆனால் உலகளாவிய தரத்தில் இருக்கும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் மாநிலங்களுடன் ஒரு பெரிய ஒருங்கிணைப்பு முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும். வழக்கமான நேருக்கு நேர் சந்திப்புகள் இல்லாமல் விரல் நுனியில் மதிப்பீடு செய்ய உதவும் (மடிக்கணினிகள் அல்லது மொபைல்களில்) திறமையான மேலாண்மை அமைப்பு இதற்கு தேவைப்படுகிறது. தொற்றுநோய் சூழ்நிலையில் காணொளி மூலமாக கூட்டங்கள் நடத்துவது சிறிய கூட்டங்களுக்காக நீண்ட பயணங்களைத் தவிர்ப்பதோடு ஆற்றல் மற்றும் வளங்கள் இரண்டையும் மிச்சப்படுத்துவது மட்டுமன்றி, முக்கியமாக செயல்திறனை அதிகரிப்பதற்கும் உதவும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.