ETV Bharat / opinion

பாதுகாப்பு துறையில் நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு!

author img

By

Published : Feb 2, 2021, 7:33 PM IST

எதிர்பார்த்தபடியே, ஆகப்பெரும் நிதியொதுக்கீடு செய்யப்பட்டது பொதுச்சுகாதார அமைப்புகளுக்கும், அவற்றிற்குத் தொடர்பான உள்கட்டமைப்புக்கு மட்டுமே. 2021-22 நிதியாண்டில் அவற்றிற்கான மொத்தச் செலவு மதிப்பீடு ரூபாய் 2,23,846 கோடி. அதில் 35,000 கோடி ரூபாய் தடுப்பூசி மருந்துக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு துறை
பாதுகாப்பு துறை

2020-ல் கோவிட்-19 என்னும் உலகம் முழுவதும் பரவிய வைரஸ் ஆகப்பெரிய மனித உயிரிழப்பையும் அளப்பரிய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் ஏற்படுத்திவிட்டது. இதன் விளைவாக, இதுவரை இல்லாத பொருளாதார வீழ்ச்சியை உலகம் சந்தித்தது. தேசங்களின் பொருளாதாரங்கள் சேதப்பட்டுச் சுருங்கிப் போயின.

இதனால் அரசுக் கொள்கை வடிவமைப்பாளர்கள் மிகப்பெரிய சவாலைச் சந்திக்க வேண்டியதாயிற்று. கடுமையான நிதிக் கட்டுப்பாடுகளுக்கும் சோதனைகளுக்கும் மத்தியில், அவர்கள் மெல்ல நகரும் பாதையை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டியதாயிற்று.

இந்தப் பின்னணியில் இந்த வருடம் பிப்ரவரி1ஆம் தேதியன்று சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட், பொதுச்சுகாதாரம் மற்றும் குடிமக்கள் நலன் ஆகியவற்றைத் தவிர்த்து எல்லாத் துறைகளிலும் ‘செலவைச் சுருக்கும்’ குணாதிசயத்தை வெளிப்படுத்தியது.

எதிர்பார்த்தபடியே, ஆகப்பெரும் நிதியொதுக்கீடு செய்யப்பட்டது பொதுச்சுகாதார அமைப்புகளுக்கும், அவற்றிற்குத் தொடர்பான உள்கட்டமைப்புக்கு மட்டுமே. 2021-22 நிதியாண்டில் அவற்றிற்கான மொத்தச் செலவு மதிப்பீடு ரூபாய் 2,23,846 கோடி. அதில் 35,000 கோடி ரூபாய் தடுப்பூசி மருந்துக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இது கடந்த வருடத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை விட 137 விழுக்காடு அதிகம். எல்லோரும் வரவேற்க இருக்கும் ஓர் அம்சம்தான் இது. இந்நேரத்தில் மனதில் வைத்து கொள்ள வேண்டிய விசயம் இதுதான். உலகம் இன்னும் கோவிட்-19-ஐ முற்றிலும் கடந்து விடவில்லை. நோயை வென்று உறுதி செய்யப்பட்ட பாதுகாப்பான ஒரு பிரதேசத்திற்குள் நாம் கடந்து உள் நுழைவதற்கு இன்னும் ஓரிரண்டு ஆகலாம்.

சாணக்கியர் எழுதிய ’அர்த்த சாஸ்திரம்’ என்னும் ஆதிக்கால இந்திய ஸ்மிருதியில் வகுத்துரைக்கப்பட்டு விதந்தோதப்பட்ட மக்கள் பாதுகாப்பு அல்லது ‘யோகஷேமம்’ (மக்கள் நலன்) என்பதிற்குத்தான் முன்னுரிமை தரவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனினும் இறையாண்மையோடு இணைக்கப்பட்ட தேசியப் பாதுகாப்பு என்பதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைமை மீது சுமத்தப்பட்ட சற்றும் மதிப்புக் குறைவில்லாத ஒரு பொறுப்பு.

மோடி அரசிற்கு இது இன்னும் அதீதமான அவசரநிலை. 2020 கோடைக் காலத்தில் லடாக் பிராந்தியத்தில் பிரிக்கப்படாத எல்ஏசி (வாஸ்தவக் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு) வழியாக சீனா நடத்திய அராஜகத்தை மனதில் கொள்வது உசிதம்.

பாதுகாப்புத் துறைக்கு இந்த நிதி ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுக்காக தேசம் ஆர்வத்தோடு காத்திருந்தது. ஆனால் இந்த விசயத்தில் பட்ஜெட்டில் ஆச்சரியமூட்டும் அம்சங்கள் என்று ஏதுமில்லை. ஒட்டுமொத்த ஒதுக்கீட்டின் உயர்வு கொஞ்சம்தான் அதிகமாக இருந்தது. முந்தைய நிதியாண்டின் திருத்தப்பட்ட செலவுத் தொகையான ரூபாய் 4,71,000 கோடி என்பது இந்த நிதியாண்டில் (2021-22) ரூபாய் 4,78,000 கோடியாக பட்ஜெட் செலவு மதிப்பீட்டில் உயர்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட இது அமெரிக்கன் டாலர் 65.46 பில்லியன் (இன்றைய அந்நியச் செலவாணி விகிதத்தில்).

முந்தைய நிதியாண்டின் திருத்தப்பட்ட செலவுத் தொகையில் இந்த ஆண்டு ஏற்பட்டிருக்கும் உயர்வு என்பது மிதமான 1.48 விழுக்காடு மட்டுமே. இந்த ஒதுக்கீடு இந்த நிதியாண்டிற்காக வரையறுக்கப் பட்டிருக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 1.63 சதவீதம். பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே இருக்கிறது, 2011-12-லிருந்து. நம்பிக்கையான இந்திய ராணுவத்தைப் போஷாக்கோடு வைத்திருப்பதில் தேசம் பலமாக இருக்க வேண்டும் என்றால் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டின் விகிதம் 3 சதவீதத்தை நோக்கிப் போகவேண்டும் என்பது தொழில்நுட்ப ரீதியிலான ஒரு கணக்கு.

இன்று இந்தியா எதிர்கொண்டிருக்கும் சவால்களின் வீச்சைப் பார்த்தால், என்னதான் சீன அபாயம் இருந்தாலும் கூட, பாதுகாப்புத் துறைக்கான செலவை தேசம் இறுக்கித்தான் பிடிக்க வேண்டியிருக்கிறது என்பது நிதர்சனம்.

புள்ளி விவரங்களைப் பிரித்து ஆராய்ந்தால் அதில் நிஜங்களின் விவரணை இருக்கும். மொத்த ஒதுக்கீடான ரூபாய் 4,78,00 கோடியில் ஓய்வூதியம் ரூபாய் 1,16,000 கோடி. பாதுகாப்புத் துறைச் சேவைகளுக்கு ரூபாய் 3,62,00 கோடி. கடந்த வருடத்தை ஒப்பிடுகையில், இந்த ஒதுக்கீடு சற்று பலமானதுதான். ஏனென்றால் பாதுகாப்பு அமைச்சகத்திற்கும், அதன் வெவ்வேறான பிரிவுகளுக்கும் செய்யப்பட்டிருக்கிற ஒதுக்கீடு ரூபாய் 3,37,000 கோடியிலிருந்து ரூபாய் 3,62,000 கோடியாக உயர்ந்திருக்கிறது.

2021-22 நிதியாண்டில் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீட்டில் மூலதனத் தொகை ரூபாய் 1,35,000 கோடி. இந்தப் பட்ஜெட் பிரிவின் கீழ்தான் ஆயுதங்களை நவீனப்படுத்த முடியும்; பீரங்கிகள், கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஆகிய புதிய பொருட்களை வாங்க முடியும். இதன் உள்ளே புதைந்திருக்கும் ஒரு தகவல் என்னவென்றால், கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவோடு நிகழ்ந்த போராட்டத்தினால் காயம்பட்ட கடந்த வருடத்தில் திருத்தப்பட்ட மூதலீட்டுச் செலவு ரூபாய் 1,34,510 கோடி. கடந்த ஆண்டின் திருத்தப்பட்ட செலவினத்திற்கும் இன்றைய நிதி ஆண்டிற்காக மதிப்பிடப்பட்டிருக்கிற மூலதன ஒதுக்கீட்டிற்கும் உள்ள வித்தியாசம் வெறும் ரூபாய் 500 கோடி மட்டுமே.

கடந்த நிதி ஆண்டின் மூலதனப் பகுதியின் பட்ஜெட் செய்யப்பட்ட மதிப்பீடு ரூபாய் 1,14,000 கோடி. பட்ஜெட் செய்யப்பட்ட மதிப்பீட்டின்படி பார்த்தால், இது ரூபாய் 21,000 கோடி உயர்வு. இது 19 சதவீத உயர்வு என்று வரவேற்கப்படுகிறது. எனினும், கடந்த ஆண்டின் திருத்தப்பட்ட செலவு என்பதையும், இன்றைய பட்ஜெட் மதிப்பீட்டையும் ஒப்பிடுவதுதான் சரியான, இன்னும் பொருத்தமான ஒப்பீடாகும். அப்படிப் பார்த்தால் இந்த உயர்வு மிதமான ரூபாய் 500 கோடியாகவே இருக்கும். அதாவது, 0.5 சதவீதத்திற்கும் கீழாகவே இருக்கும்.

முப்படைகளான ராணுவம், கப்பல்படை மற்றும் விமானப்படை ஆகியவை கடும் நிதித் தேவையில் இருக்கின்றன. தீர்ந்துக் கொண்டிருக்கும் அவற்றின் கையிருப்புப் பொருட்களுக்கு புத்தம் புதிய மாற்றுப் பொருட்கள் தேவைப் படுகின்றன. ஒவ்வொரு படையினது செயல்பாட்டு நம்பகத்தன்மையின் அதிமுக்கிய காரணியும், குறியீடும் மூலதன ஒதுக்கீடுதான். இப்போது இந்த விசயத்தில் இருக்கும் நிஜம் கசப்பாகத்தான் இருக்கிறது.

கடந்த நிதியாண்டில், திருத்தப்பட்ட மூலதனச் செலவுப் பட்டியல் (நிஜத்தில் செலவழிக்கப்பட்ட தொகை) பின்வருமாறு:

ராணுவம் – ரூபாய் 33,213 கோடி: கப்பல்படை – ரூபாய் 37,542 கோடி; விமானப்படை – ரூபாய் 55,055 கோடி.

நடப்பு நிதி ஆண்டில், மதிப்பிடப்பட்டிருக்கும் மூலதன ஒதுக்கீடு பின்வருமாறு:

ராணுவம் – ரூபாய் 36,482 கோடி: கப்பல்படை – ரூபாய் 33,254 கோடி; விமானப்படை – ரூபாய் 53,215 கோடி.

இந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், மிக உயர்ந்த பாதுகாப்புத் துறைக்கு நடப்பு நிதியாண்டுப் பட்ஜெட் ஒதுக்கீடு சொல்வது இதுதான்: நடப்புக்காலப் பாதுகாப்புச் சவால்களை (சீனாவுடன் ஆன எல்லைப் பதற்றங்களை) மனதில் இருத்தி ராணுவத்திற்கு இந்த ஆண்டு முன்னுரிமை கொடுக்க வேண்டியிருக்கிறது. அதனால்தான் ராணுவத்திற்கான முதலீட்டு ஒதுக்கீடு ரூபாய் 3,269 கோடி அதிகமாக உயர்ந்திருக்கிறது. கப்பல் படைக்கும், விமானப் படைக்கும் ஒதுக்கீடு குறைந்திருக்கிறது.

இதிலிருந்து ஊகிக்க முடிகின்ற விசயம் இதுதான்: இந்தியாவின் உயர்ந்த பாதுகாப்பு நிர்வாகம் இந்த ஆண்டு எல்லைகடந்த படைபலத்தை (கப்பற்படை, விமானப்படை) கூட்டும் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது. அடுத்த வருடம் இந்தியப் பொருளாதாரம் பலமாக மீண்டு வருமானால், இந்த நோக்கில் மாற்றம் இருக்கும் என்று நம்பலாம்.

படைபலத்தை நவீனமாக்குவதற்குப் போதுமான நிதி அளிப்பது என்பது இந்திய அரசியலின் உச்ச அமைப்புக்கு ஒரு சிக்கலான சவாலாகவே இருந்திருக்கிறது. இந்தியாவில் பாதுகாப்புக்குத் துறைக்கான ஒதுக்கீடு உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) எவ்வளவு சதவீதம் என்ற கணக்கில் பார்த்தால், மிகவும் குறைச்சலாக இருந்தது ஜவஹர்லால் நேரு பிரதமாக இருந்த காலக்கட்டத்தில்தான். இது ஒரு நற்சகுனமான ஒப்பீடு அல்லதான். ஆனால் நிஜம் என்னவென்றால், அந்தக் காலக்கட்டத்தில் 1962 அக்டோபர் மாதத்திற்குள் இந்தியாவுக்கு பலத்த அடி விழுந்தது. சரித்திரம் திரும்பாமல் இருக்கலாம். ஆனால் அதன் தாளலயங்களை விவேகத்துடன் எதிர்பார்ப்பது உசிதம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.