புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு மும்மொழி திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மேலும், 3,5,8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும். மாணவர்கள் ஐந்து அல்லது எட்டாம் வகுப்பு வரை தங்களின் தாய்மொழியில் கல்வி பயில வேண்டியது கட்டாயம்.
இந்நிலையில் இதுகுறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் தினேஷ் சிங், ”மாணவர்கள் இந்த கல்வி முறையைப் பின்பற்றிக்கொள்வார்கள். பல மொழிகளைக் கற்றுக்கொள்வது, பிற்காலத்தில் அவர்களுக்குத்தான் பயனுள்ளதாக அமையும்.
புதிய கல்விக் கொள்கை மூலம் மாணவர்களின் மனநலமும் உடல்நலமும் சிறப்பாக இருக்கும். அதனால், சில மொழிகளைக் கற்பதற்கு மாணவர்களோ, பெற்றோர்களோ வெட்கப்பட வேண்டாம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுமா?