ETV Bharat / opinion

வேலியே பயிரை மேய்ந்தால் அது மிகவும் அபாயகரமானது - Prevention of Corruption Act

ரஷ்யா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் ஊழல் கண்காணிப்பு அமைப்புகள் சில விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கட்டமைப்பிற்குள் செயல்படுகின்றன. அங்கு போலல்லாமல், இந்தியாவில் சிபிஐ ஒருபுறம் அரசியல் தலையீடு மறுபுறம் பயனற்ற புலனாய்வு வழிமுறையால் சிதைக்கப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் சிரிப்பாய் சிரிக்கிறது

It is a disaster if fence itself eats the crop

author img

By

Published : Jan 22, 2021, 12:53 PM IST

அதிகாரம், சக்தியுடன் ஊழலைக் கட்டுப்படுத்தும் பெரும் பொறுப்பைக் கொண்டுள்ள மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) என்ற ஒரு மதிப்புமிக்க அமைப்பே ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளது. இது அதனை வெறுப்பவர்கள் சுமத்திய ஒரு மோசமான குற்றச்சாட்டு அல்ல, ஆனால் மத்திய புலனாய்வு துறையே வெளிப்படுத்திய கசப்பான உண்மை. சிபிஐ தாக்கல் செய்த எட்டு பக்க முதல் தகவல் அறிக்கையில் (FIR), தங்கள் சொந்த அதிகாரிகள் சிலர் வங்கி மோசடிகளில் ஈடுபட்டு வழக்குகளை எதிர்கொள்ளும் சில நிறுவனங்களுடன் நெருக்கமான தொடர்புடையவர்கள் என்றும், ஊழல் வழிகள் மூலம் அவற்றை காப்பாற்றினர் என்றும் தெளிவுபடுத்தியது.

இரண்டு டி.எஸ்.பி-கள் உட்பட நான்கு சி.பி.ஐ. அலுவலர்கள், வழக்குரைஞர்கள் உட்பட சில தனிநபர்கள் மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. பொங்கலன்று, டெல்லி, காஜியாபாத், நொய்டா, மீரட், கான்பூர் உள்ளிட்ட 14 இடங்களில் சிபிஐ தங்கள் அலுவலகங்களில் விரிவான சோதனைகளை நடத்தியது. சிபிஐ இன்ஸ்பெக்டர் கபில் தங்கட், முக்கிய தகவல்களை தருவதற்காக உயர் அதிகாரிகளிடமிருந்து பல தவணைகளாக ரூ.16 லட்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார். இரண்டு டி.எஸ்.பிக்கள், இரண்டு வழக்கறிஞர்களிடமிருந்து தலா ரூ.15 லட்சம் பெற்றது, இடைத்தரகர்கள் பெற்ற பணம் குறித்த தகவல்கள் போன்றவை ஆழமாக வேரூன்றிய ஊழல் கலாச்சாரத்தின் தெளிவான எடுத்துக்காட்டுகள். லட்சக்கணக்கான ரூபாய் கை மாறுவதால் தேசத்தின் கவுரவம் கெட்டுப்போவது, பல வழக்குகளின் விசாரணைகள் மற்றும் விசாரணையில் செல்வாக்கு செலுத்துவதற்கான நோக்கம் ஆகியவை அதிர்ச்சியூட்டுகிறது

ஐம்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து முட்டாள்கள் தினத்தன்று (ஏப்ரல் 1) உருவாக்கப்பட்ட மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) மத்திய அரசின் கைப்பாவை என இழிவுபடுத்தப்பட்டு இந்திரா காந்தியின் காலத்தில் மிகவும் ஊழல் நிறைந்ததாக இருந்தது. இது மத்திய அரசின் கூண்டில் அடைபட்ட கிளி ஆகிவிட்டது என்று பல முறை நீதிமன்றங்கள் கருத்து தெரிவித்துள்ளன. அரசியல் தலையீட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு வலுவான புலனாய்வு அமைப்பாக மத்திய புலனாய்வு அமைப்பு வெளிவர வேண்டும் என்றும், அதன் பணி அனைவரின் பாராட்டையும் பெற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தாலும், அதன் முன்னேற்றம் எப்போதுமே விலகிக்கொண்டே இருக்கிறது. அரசியல் அழுத்தங்கள் மற்றும் பிற காரணங்களால் பல வழக்குகள் தோல்வியடைந்தது. அதற்கு பின்னால் தலைமையின் ஈடுபாட்டைத் தவிர, பரவலான ஊழல் நடைமுறைகளும் தற்போதைய நோய்க்கு முக்கிய காரணம் என்பதில் பரவலான சந்தேகங்கள் அதிகரித்து வருகின்றன.

நேர்மை, தொழில், பாரபட்சமற்ற தன்மை ஆகியவை அதன் மூன்று வழிகாட்டும் விளக்குகள் என்று சிபிஐ பெருமையுடன் கூறுகிறது.

அரசியல் முதலாளிகளின் சொல்படி நடப்பதில் மிகவும் பிரபலமான சிபிஐ, தனக்கு முதுகெலும்பு இல்லை என்று பலமுறை வெட்கமின்றி நிரூபித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அலோக் வர்மாவுக்கும் ராகேஷ் அஸ்தானாபவுட்டுக்கும் இடையே ஒரு சூடான வாதம் மொத்த அமைப்பிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில், அஸ்தானா, மொயின்குரேஷி என்ற இறைச்சி வணிகருக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகளை விசாரித்து வந்த ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை வழிநடத்தி வந்தார் . சில மாதங்களில் ஓய்வு பெறவிருந்த அலோக் வர்மா தலைமையில் சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. அதன்படி, ஊழல் வழக்கின் முக்கிய குற்றவாளி வேறு யாருமல்ல, சிறப்பு இயக்குநராக பணியாற்றும் அஸ்தானா தான். சிபிஐ வலையில் இருந்து வெளியேற ரூ.3 கோடி கொடுத்தும், சிபிஐ அதிகாரிகள் தன்னை இன்னமும் துன்புறுத்துகிறார்கள் என்று சதீஷ் என்ற நபரின் சாட்சியம் அந்த நாள்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராகேஷ் அஸ்தானா அந்த வழக்கில் குற்றவாளி அல்ல என்று கடந்த மார்ச் மாதம் சிபிஐ கூறியதன் அடிப்படையில், சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழக்கை கைவிட்டது, மோதல் அதிகாரப்பூர்வமாக தணிந்தது. ஆனால் லஞ்சம் பெறப்பட்டதாகவும், லஞ்சம் பெறுவதற்கு முயலுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனாலும், யாரையும் குற்றவாளியாக கூறவில்லை.

இப்போது, ​​மும்பை மற்றும் உ.பி.யில் வெளிவந்த பல கோடி ரூபாய் வங்கி ஊழல்களில், பல அதிகாரிகள் ஊழலில் சிக்கியுள்ளனர். இறுதியில் என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? குற்றம் நடந்தது உண்மை, ஆனால் வழக்கு தவறானது என்பதை நிரூபிப்பதில் சிபிஐ மிகவும் திறமையானது. ஆனால், தமது துறையில் உள்ள திருடர்கள் விஷயத்தில் இது வித்தியாசமாக இருக்குமா என்பதுதான் தற்போதைய கேள்வி.

குருக்ராமில் 14,000 ஏக்கர் நிலத்தை பூபிந்தர் சிங் ஹூடா அரசு கையகப்படுத்தியது தொடர்பான சர்ச்சையில் சிபிஐ அலட்சியமாக நடந்து வருவதாக 2019 டிசம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2009ஆம் ஆண்டு போடப்பட்ட வழக்கு இன்னும் பல ஆண்டுகளாக நீடிப்பதை அது கடுமையாக சாடியது. சிபிஐயின் 'செயல்திறன்' இவ்வாறு இருக்கும்போது, அது தனது சொந்த துறையில் உள்ள வழக்குகளை எவ்வளவு திறமையாக கையாளும் என்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டும். மூன்று சிபிஐ அதிகாரிகள் மீது மூன்று ஆண்டுகளில் ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த பட்டியல் இன்னும் முடிவில்லாமல் வளர்ந்து வருகிறது. 15 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, சிபிஐ சமீபத்தில் தனது குற்றவியல் கையேட்டில் மாற்றங்களைச் செய்தது. இனிமேல், ஊழல் தடுப்புச் சட்டத்தின் (PC Act) கீழ் அனைத்து விசாரணைகளும் அதிகபட்சம் ஒன்பது மாதங்களுக்குள் முடிக்கப்படும். அதன் உள் திருடர்களுக்கு அதே காலக்கெடுவைப் பின்பற்றி வெற்றி பெற்றால் மட்டுமே, அதன் நம்பகத்தன்மை மேம்படுத்தப்படும்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (CVC) தலைவராக பி.ஜே.தாமஸை நியமித்ததை உச்சநீதிமன்றம் நிறுத்தியது, தனக்கு எதிரான வழக்குகளைக் கொண்ட ஒரு நபர் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான மிக உயர்ந்த அதிகாரத்தின் தலைமையை எவ்வாறு ஏற்க முடியும் என்றும் கூறியது. ஊழல் வழக்குகளை இணைய நிதிக் குற்றங்களை கண்டுபிடிக்கும் பொறுப்பில் உள்ள சிபிஐ, குற்றம் சாட்டப்பட்டுள்ள உள் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

அமெரிக்காவில் FBI (பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்) மற்றும் CIA (மத்திய புலனாய்வு அமைப்பு) ஆகியவை சிறப்பு சட்டங்கள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. ரஷ்யா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலும் ஊழல் கண்காணிப்பு அமைப்புகள் சில விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கட்டமைப்பிற்குள் செயல்படுகின்றன. அங்கு போலல்லாமல், இந்தியாவில் சிபிஐ ஒருபுறம் அரசியல் தலையீடு மற்றும் மறுபுறம் பயனற்ற புலனாய்வு வழிமுறையால் சிதைக்கப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் சிரிப்பாய் சிரிக்கிறது.

ஊழலைக் கட்டுப்படுத்தும் குறிப்பிட்ட நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட அமைப்புகள் ஊழல் குற்றச்சாட்டுகளில் ஆளாகி இருப்பதை விட துரதிர்ஷ்டவசமானது என்ன? நேர்மையற்ற ஊழியர்கள் கடுமையாகவும் விரைவாகவும் தண்டிக்கப்படும்போது தான், மற்றவர்கள் திருந்தி, ஊழலில் ஈடுபடத் தயங்குவார்கள். சிபிஐயும் தனது நிலையை மேம்படுத்தி அதன் இழந்த பெருமையை மீண்டும் பெற முடியும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இதையும் படிங்க: சீனாவுக்குள் நுழைய 28 அமெரிக்க அரசு அலுவலர்களுக்கு தடை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.