ETV Bharat / opinion

இந்தியா - பாகிஸ்தான் சிந்து நீர் ஒப்பந்தம்: நதி எழுதும் புது விதி - India Pakistan relation

காஷ்மீருக்கான சிறப்புச் சட்டப்பிரிவு 370ஐ இந்திய அரசாங்கம் நீக்கியதும் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களினால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உரசல்களும் விரிசல்களும் கோபதாபங்களும் அதிகமாயின. அதன் விளைவாக சிந்து நதிநீர் கமிஷன் கூட்டம் விதிப்படி ஆண்டுக்கொரு முறை நடைபெறாமல் போனது.

Indus
Indus
author img

By

Published : Mar 22, 2021, 9:16 AM IST

மூத்த பத்திரிகையாளரும் ஈடிவி பாரத் ஆசிரியருமான பிலால் பாட் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இருக்கும் நிரந்தர சிந்து நதிநீர் கமிஷன் விரைவில் கூடிப் பேச இருக்கிறது. 1960ஆம் ஆண்டில் இரு நாடுகளும் கொண்ட ஓர் ஒப்பந்தத்தின்படி அவை ஒத்துக்கொண்ட நதிநீர்ப் பங்கீட்டைப் பற்றியும், சட்டப்பூர்வமான நீர் விநியோகத்தைப் பற்றியும், அவற்றில் இருக்கும் சச்சரவுகள், சண்டைகள் பற்றியும் அந்தக் கமிஷன் விவாதிக்கப் போகின்றது.

இது சம்பந்தமாக பாகிஸ்தானிலிருந்து வரும் ஒரு குழு செவ்வாய்க் கிழமை அன்று டெல்லிக்கு விஜயம் செய்து பிரச்னைகளை விவாதிக்க இருக்கிறது. குறிப்பாக, ஜம்மு காஷ்மீரில் ஓடும் செனாப் நதியில் கட்டப்பட்டிருக்கும் அனல்மின் நிலையங்கள் சம்பந்தமாக சர்ச்சையை உருவாக்கிய சச்சரவுகளில், பிரச்னைகளில் அக்குழு முழுக் கவனத்தையும் செலுத்த இருக்கிறது.

நிரந்தர சிந்து நதிநீர் கமிஷன் வருடத்திற்கு ஒருமுறை கூட வேண்டும் என்பது இருநாடுகளும் ஒத்துக் கொண்டிருந்த ஒரு விதி. ஆனால், கடைசியாக கமிஷன் லாகூரில் 2018-ல் கூடிப் பேசி கலைந்து போனது. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இது நடைபெற்றது.

காஷ்மீருக்கான சிறப்புச் சட்டப்பிரிவு 370-ஐ இந்திய அரசாங்கம் நீக்கியதும் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களினால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உரசல்களுல், விரிசல்களும், கோபதாபங்களும் அதிகமாயின. அதன் விளைவாக, சிந்து நதிநீர் கமிஷன் கூட்டம் விதிப்படி ஆண்டுக்கொரு முறை நடைபெறாமல் போனது.

எனினும் சம்பிரதாயம் மீறிய ரகசிய வார்த்தைப் பரிமாற்றத் தொடர்பினால் இருநாடுகளுக்கும் இடையே ஆன பகையுணர்வு பின்னுக்குத் தள்ளப்பட்டது போலத் தோன்றியது. பின்னர் இரு நாடுகளும் ஒரு மாதத்திற்கு முன்பு பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

எல்லையின் இருபுறத்திலிருந்தும் புறப்பட்டு இருநாடுகளுக்குள்ளும் தவழும் நதீநீரை நியாயமான முறையில் விநியோகிப்பது, பகிர்ந்துகொள்வது சம்பந்தமாக இந்தியாவும் பாகிஸ்தானும் 1960-ல் கையெழுத்திட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் உள்பட பல்வேறு உடன்படிக்கைகளை விவாதித்து சர்ச்சைகளையும், சச்சரவுகளையும் தீர்த்துக் கொள்ள இப்போது இருநாடுகளும் விழைகின்றன. 1960-ஆம் ஆண்டு சிந்து நதிநீர் ஒப்பந்தம் உருவாவதற்கு முன்பு வரை அப்போது பிரிவினைப் பட்டிருந்த இந்த இருநாடுகளுக்கும் இடையிலான நதிநீர்ப் பங்கீட்டை ஒழுங்குபடுத்தியது பின்பு உறைந்துவிட்ட 1948-ஆம் ஆண்டு உடன்படிக்கைதான்.

இந்தியா-பாகிஸ்தான் சிந்து நதிநீர் ஒப்பத்தத்தில் ஆறு நதிகள் பற்றிய ஷரத்துகள் இருக்கின்றன: சிந்துநதி, ஜெலம், செலாப், ரவி, சட்லஜ் மற்றும் பீஸ் ஆகியவை அந்த ஆறு நதிகள். ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் உருவாகி மேற்குத்திசை நோக்கிப் புறப்பட்டு பாகிஸ்தானுக்குள் தவழ்ந்து கொண்டிருக்கும் ஜெலம், செனாப் மற்றும் இந்து நதிகளின் மீது பாகிஸ்தானுக்கு முழுமையான உரிமைகள் உண்டு. அதனால் நீரைச் சேமிக்கிறேன் பேர்வழி என்று அந்த நதிகளின் குறுக்கே அணைகள் கட்டி பாகிஸ்தானின் நதிநீர் உரிமையைப் பறித்துவிடும் அதிகாரம் இந்தியாவுக்கு சுத்தமாகக் கிடையாது.

அதே சமயம் அதே உடன்படிக்கைப் படி, மற்ற மூன்று நதிகளான ரவி, பீஸ் மற்றும் சட்லஜ் ஆகியவற்றின் மீது இந்தியாவுக்கும் முழு உரிமை உண்டு. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளோடு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களில் உலக வங்கியும் ஒன்று. ஆனால் சிந்துநதி சீனாவின் திபெத் பீடபூமியில் உருவாகிறது என்றாலும், ஒப்பந்தத்தில் சீனா இடம்பெறவில்லை. இதில் உலக வங்கியின் பாத்திரம் பஞ்சாயத்து செய்யும் ஒரு நடுவர் என்ற அளவில் மட்டுமே இருந்தது. சிந்துநதி நீர் ஒப்பந்தத்தின் கட்டமைப்பை மீறிக் கட்டப்படும் அல்லது செயல்படுத்தப் படும் எந்தத் திட்டத்தையும் உலக வங்கி ஆதரிக்காது; அதற்கு நிதி உதவியும் அது செய்யாது. உண்மையைச் சொன்னால், இந்தியா, பாகிஸ்தான் என்ற இந்த இரண்டு பகை நாடுகளையும் பேசிச் சமாளித்து சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் கையொப்பமிடச் செய்ததே உலக வங்கிதான்.

சிந்துநதி, செனாப், மற்றும் ஜெலம் ஆகிய மூன்று நதிகள்தான் பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் பெரும்பங்கு, அதுவும் அதிமுக்கியமான பங்கு வகிக்கின்றன. அதனால் பாகிஸ்தானின் உயிர்த்தடமே, மூலநாடியே இந்த மூன்று நதிகள்தான். அவைதான் அந்த நாட்டின் விவசாயப் பொருளாதாரத்தின் ஆதாரச் சுருதி. செனாப், ஜம்மு, காஷ்மீர் வழியாக பயணிக்கும் செனாப், ஜெலம் நதிகள் கட்டுப்பாட்டுக் கோடு (லைன் ஆஃப் கண்ட்ரோல்) என்றறியப்படும் போர்நிறுத்த எல்லை வழியாக பாகிஸ்தானில் நுழைகின்றன. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு கையெழுத்தான பின்பு, அந்த நதிகள் அமைதியாகவே இருக்கின்றன.

இந்தியாவில் நதிநீர் விவாதங்களில் கலந்துகொள்ளப் போகும் பாகிஸ்தான் சிந்துநதி நிரந்தர கமிஷன் தலைவர் சையத் மேர் அலி ஷாவும் அவரது இந்திய இணையாளரான பி.கே சாக்‌ஷேனாவும், வானிலை ஆய்வு, நீர்ப்பாசனம், மற்றும் அவற்றின் தொடர்பான துறைகளில் இருக்கும் நிபுணர்கள் குழுக்களைத் துணைக்கு வைத்துக் கொண்டு, சில சச்சரவுகளை, சர்ச்சைகளைப் பேசித் தீர்க்க இருக்கின்றனர். அவற்றில் அதிமுக்கியமான சச்சரவுகள் ஜம்மு, காஷ்மீரில் செயற்படுத்தப்படும் செனாப் நதியின் பக்கிலிஹார், பாக்கல் நீர்மின் திட்டங்களைப் பற்றியவை. ஜம்முப் பகுதியில் தோடா, கிஷ்ட்வார் ஆகிய அருகருகே இருக்கும் இரண்டு மாவட்டங்களில் ஓடும் செனாப் நதியில் அந்த இரண்டு நீர்மின் நிலையங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

செனாப் நதியின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டதற்கு எதிரான தன் வருத்தத்தையும், எதிர்ப்பையும் பாகிஸ்தான் முன்பே இந்தியாவிடம் தெரிவித்திருந்தது. அந்த இடங்களுக்குச் செல்லக் கூடிய வசதியை அந்த நாடு கோரியிருந்தது. நிஜத்தில் ஜம்மு, காஷ்மீரிலும், இன்னும் பிற பகுதிகளிலும் இருக்கும் பவ்வேறு களங்களுக்கு ஒரு நிபுணர் குழு விஜயம் செய்தது. அதன் விளைவாக அணைவேலை நிறுத்தப்பட்டது. ஆயினும் உலக வங்கியின் தலையீட்டினால் அது மீண்டும் தொடர்ந்தது.

தன் நதிகளில் நீர்மின் திட்டங்களை அதிகரிக்கும் இந்தியாவின் தொடர்ந்த முனைப்பு பாகிஸ்தானுக்கு எரிச்சல் ஊட்டியது. இது சம்பந்தமாக பாகிஸ்தான் தலைவர்கள் இந்தியாவின் தலைவர்களோடு தொடர்பு கொண்டு, பேச ஆரம்பித்தனர்.

இந்தியாவோடு பேச்சுவார்த்தை கொள்வதில் முதலில் ஆர்வம் காட்டியவர் பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்தான். இஸ்லாமாபாத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த பாதுகாப்புத் துறை தந்திரோபாய நிகழ்வு ஒன்றில பாகிஸ்தான் இராணுவத் தலைவர் க்வாமர் ஜாவத் பஜ்வா இம்ரான் கானின் திட்டத்தையும், ஆர்வத்தையும் ஏற்றுக் கொண்டார். அத்துடன், சமாதானப் பேச்சுவார்த்தைக்கான ஒரு ‘செளஜன்யமான சூழலை’ இந்தியா காஷ்மீரில் உருவாக்கிட வேண்டும் என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார்.

நிஜத்தில் பஜ்வா இன்னும் ஒருபடி மேலே சென்று, தொடர்ந்து முன்செல்ல வேண்டுமென்றால் இரு நாடுகளும் கடந்த காலத்தைக் குழிதோண்டி புதைக்க வேண்டும் என்றுகூட சொல்லிவிட்டார். காஷ்மீர்ப் பிரச்சினை சம்பந்தமான பாகிஸ்தான் கொள்கையில் இது ஒரு பெரும் புரட்சிகரமான மாற்றம் என்று இருநாட்டுத் தரப்பு ஆய்வாளர்களும் கருதுகிறார்கள். ஏனெனில் காஷ்மீருக்கான இந்தியாவின் சட்டப்பிரிவு 370-யை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று இப்போது பாகிஸ்தான் சொல்வதில்லை. இது சம்பந்தமான ஐக்கிய நாட்டுச் சபையின் தீர்மானங்களைப் பற்றிக் கூட பாகிஸ்தான் குறிப்பிடுவதில்லை. எல்லைகளில் பற்றி எரியும் பகை நெருப்பை அணைக்கும் பொருட்டு புதுப்பிக்கப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம்தான் இரு நாடுகளையும் இப்போது இணைத்து வைத்திருக்கிறது.

காஷ்மீர் மீதான தனது நிலைப்பாட்டைப் பாகிஸ்தான் கைவிட்டு விட்டது என்பது நாளுக்கு நாள் உள்ளங்கை நெல்லிபோலத் தெளிவாகத் தெரிகிறது. காஷ்மீரில் பாகிஸ்தானுக்குத் தீவிரமான ஆதரவாகச் செயல்பட்ட சையத் அலி கிலானி இந்தியாவும் பாகிஸ்தானும் புதுப்பித்த போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் கடுமையாக விமர்சனம் செய்து அதை பாகிஸ்தானின் கொள்கை இறக்கம் என்று சொன்னார். அவரைக் கிடுக்கிப் பிடிக்குள் பாகிஸ்தான் அரசு கொண்டுவந்த நடவடிக்கை அந்த நாட்டின் காஷ்மீர் கொள்கை மாற்றத்திற்கு ஆகச்சிறந்த உதாரணம். காஷ்மீரிலிருந்து பாகிஸ்தானுக்குத் தாவிப்பாயும் நதிகள் காஷ்மீர் சம்பந்தமான இந்தியா, பாகிஸ்தான் அரசியலில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன என்பதைத்தான் தற்போது கூடப்போகும் சிந்து நதிநீர் கமிஷன் கூட்டம் குறிக்கிறது.

தெற்கு காஷ்மீரின் வெரிநாக் பகுதியில் கருவாகி உருவாகித் தவழும் ஜெலம் நதி காஷ்மீர் மீது பாகிஸ்தானுக்கு இருக்கும் ஏக்கத்தைக் குறைத்து விட்டது போலத் தோன்றுகிறது. காஷ்மீர் சம்பந்தமான எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்து அப்பகுதியில் மிகப்பெரிய அமைதியை உருவாக்கக் கூடிய பரஸ்பர உரையாடலை இந்தியாவுடன் மேற்கொள்ள பாகிஸ்தானுக்கு ஆர்வத்தைத் தூண்டிவிட்டது போல ஜெலம் தோற்றமளிக்கிறது. இந்தக் காஷ்மீர் பிரச்சினையால்தான், நிதி நடவடிக்கைப் பணிக் குழு (Financial Action Task Force – FATF) என்ற தீவிரவாதிகளுக்குச் செல்லும் நிதியுதவியை வேவுப்பார்க்கும் ஓர் உலக அமைப்பின் கோபத்திற்கு பாகிஸ்தான் ஆளானது; மேலும் இதே காஷ்மீர் பிரச்சினையால்தான் நதிநீர்ப் பங்கீட்டில் இந்தியாவோடு பாகிஸ்தான் மோதும் நிலைமை உருவானது. அதனால்தான் பாகிஸ்தான் பிரதம அமைச்சர் இம்ரான் கானும், இராணுவத் தளபதி க்வாமர் ஜாவத் பஜ்வாவும் நதிநீர் உட்பட எல்லாப் பிரச்சினைகளையும் இந்தியாவோடு பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டிய காலத்தின் கட்டாயத்தை உணர்ந்திருக்கிறார்கள்.

தற்காலத்தில் பூகோள, அரசியல் மாற்றங்கள் ஒரு புதிய உலக அமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அதில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஓர் அதிமுக்கிய பங்கை வகிக்கின்றன. இந்தப் பின்னணியில்தான் காஷ்மீர் சம்பந்தமாகவும், நதிநீர்ப் பங்கீடு சம்பந்தமாகவும் இந்தியா-பாகிஸ்தான் உறவில் சமீபத்திய நிகழ்வுகள் அரங்கேறி இருக்கின்றன. ஒருபுறம் இந்தியா சீனாவுக்கு எதிரான நாற்கர பாதுகாப்பு உரையாடல் (quadrilateral security dialogue-QUAD) என்ற அமைப்பில் உறுப்பினராக இருக்கிறது.

(அதிகரித்துவரும் சீனாவின் ராணுவ எதேச்சாதிகாரத்தை மட்டுப்படுத்த 2007-ல் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்ட்ரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் உருவாக்கிய உலகப் பாதுகாப்பு அமைப்பு இந்த ’க்வாட்’).

மறுபுறம் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு ப்ராக்ஜெட்டில் (பிஆர்ஐ) பாகிஸ்தான் ஒரு முக்கிய கூட்டாளியாக விளங்குகிறது. சீனாவும், ரஷ்யாவும் இப்போது நெருக்கமான உறவில் இருக்கின்றன.

சிந்து நதிநீர்ப் பங்கீடு சம்பந்தமாக இந்தியாவும், பாகிஸ்தானும் மேற்கொள்ளப் போகும் பேச்சுவார்த்தைகள் காஷ்மீர் பிரச்சினையில் அந்த இரண்டு நாடுகளுக்கு இடையே நிலவிய கசப்புணர்வை, வெறுப்புறவை முற்றிலும் தீர்த்து விடுமா அல்லது இரு நாடுகளுக்கும் இடையே சமாதானமான, அமைதியான பரஸ்பர உறவு என்பது மெல்ல மெல்ல காலம் கனிந்து உருவாகக் கூடியதாக இருக்குமா என்பதைக் கணிப்பது சுவாரஸ்யமான விசயம். உற்சாகம் நிறைந்த ஊக விளையாட்டு.

எது எப்படி இருந்தாலும் சரி, ஒன்று மட்டும் ஆகத் தெளிவாகவே தெரிகிறது. காஷ்மீர் பிரச்சினை மீதான தனது அணுகுமுறையிலும், நிலைப்பாட்டிலும், பாகிஸ்தான் இதுவரை இல்லாத அளவிலான பெரும் மாறுதலைக் கொண்டிருக்கிறது. அண்டை நாட்டுறவில் விரிசலை உண்டாக்கும் காஷ்மீர் பிரச்சினையை விட உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பணியிலே இப்போது கவனம் செலுத்த பாகிஸ்தான் முயற்சி செய்கிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.