ETV Bharat / opinion

பெய்ரூட் வெடிப்புக்கு பிறகு அமோனியம் நைட்ரேட் குறித்த பார்வைகள்!

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 135க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அந்தவகையில் அமோனியம் நைட்ரேட் குறித்த நிகழ்வுகளின் தொகுப்பைக் காணலாம்.

Lebanon explosion, லெபனான் வெடி விபத்து
Lebanon explosion
author img

By

Published : Aug 9, 2020, 8:28 PM IST

ஹைதராபாத்: உரமாகப் பயன்படுத்தப்படும் அமோனியம் நைட்ரேட், சுரங்கம், குவாரி போன்ற இடங்களுக்கான வெடிபொருள் தயாரிக்கவும் பயன்படுகிறது. வெறும் அமோனியம் நைட்ரேட் வெடிக்காது.

ஆனால், வேறு ரசாயனப் பொருட்களுடன் சேரும்போது பயங்கரமாக வெடிக்கக் கூடியது. அதிக அளவில் குவித்து வைக்கும்போது தீப்பிடித்தும் விபத்தை ஏற்படுத்தக் கூடியது. இந்தியாவில் நடந்த பல்வேறு வெடிகுண்டு தாக்குதல்களில் ஆர்டிஎக்ஸ், டிஎன்டி போன்றவற்றுடன் அமோனியம் நைட்ரேட்டை இணைத்து தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமோனியம் நைட்ரேட் என்றால் என்ன?

அமோனியம் நைட்ரேட் ஏன் ஆபத்தானதாக அறியப்படுகிறது என்ற விவரத்தை காணலாம். அமோனியம் நைட்ரேட் உரங்கள் தயாரிக்கவே அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. மிகவும் குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய அமில பொருள் என இது கூறப்படுகிறது. வேதியியல் பெயரில் NH4NO3 என்று அழைக்கப்படும் அமோனியம் நைட்ரேட் இயற்கையாக கிடைக்கக் கூடியதாகும். இது அமோனியம் நேர்மின் அயனின் நைட்ரேட் உப்பாகி ஒரு வேதி சேர்மத்தில் உருவாகிறது. இது நீரில் எளிதில் கரையக் கூடிய தன்மைக் கொண்டுள்ளது.பல்வேறு பயன்பாடுகளுக்காக செயற்கையாகவும் அமோனியம் நைட்ரேட் உருவாக்கப்படுகிறது.

பெய்ரூட் வெடி விபத்து: 16 துறைமுக ஊழியர்கள் கைது!

வெடிக்க காரணம் என்ன?

பயிர்கள் செழித்து வளர அமோனியம் நைட்ரேட் உரப்பொருளாக பயன்படுத்தப்படும் அதேவேளையில் பாறைகளை உடைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. எந்தவொரு எரிபொருளும் வெடிக்க குறிப்பிட்ட சில காரணங்கள் தேவை. அதே விதிதான் அமோனியம் நைட்ரேட்டுக்கும் பொருந்தும். அமோனியம் நைட்ரேட் மிகவும் ஆற்றல் கொண்டது. இது அதிக அளவு வெப்பத்தை வெளியிடுகிறது.

ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அமோனியம் நைட்ரேட் இருந்தால் அது தீப்பிழம்பு போன்று வெளிப்புற வினைகள் பயன்படாமல் நெருப்பை வெளியிடுகிறது. அமோனியம் நைட்ரேட்டில் இருந்து ஆக்ஸிஜன் வெளியாகும் வாய்ப்பு உள்ளதால், கொழுந்து விட்டு எரிவதற்கு வசதியாக உள்ளது. பயங்கரவாதிகளும் தங்கள் தாக்குதல்களுக்கு அமோனியம் நைட்ரேட்டை பயன்படுத்தும் போக்கு தற்போது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

காணொலி:லெபனானில் பயங்கர குண்டு வெடிப்பு!

இதற்கு முன்பு நடந்த அமோனியம் நைட்ரேட் விபத்து

  • 1921 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் அமோனியம் நைட்ரேட் வெடி பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 500 பேர் உயிரிழந்தனர்
  • அமெரிக்காவில் 1947 ஆம் ஆண்டு டெக்ஸாஸ் மாகணத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் அமோனியம் நைட்ரேட் வெடித்தது. இதில் 581 பேர் உயிரிழந்தனர்
  • 2015ஆம் ஆண்டு சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற விபத்தில் அமோனியம் நைட்ரேட் உள்பட வேதிப்பொருள் வெடித்தது. இதில் 173 பேர் உயிரிழந்தனர்.

அமீரகத்தில் செயல்பாட்டை தொடங்கிய முதல் அணுமின் நிலையம்!

இந்தியாவில் அமோனியம் நைட்ரேட்...

  • ஆந்திரா: விசாகப்பட்டினத்தில் அதிக அளவு அமோனியம் நைட்ரேட் சேமிக்கப்பட்டுள்ளது. ஒன்பது தனியார் கிடங்குகளில் சுமார் 19,000 டன் உள்ளது. இது விசாகப்பட்டணத்திலிருந்து சத்தீஸ்கர், பீகார், ஒடிசா, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
  • தமிழ்நாடு: சென்னை துறைமுகத்தில் 700 டன்களுக்கு மேல் அமோனியம் நைட்ரேட் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • கேரளா: மாநிலத்தில் பல மாவட்டங்களில் 5,000 முதல் 35,000 கிலோகிராம் வரை அமோனியம் நைட்ரேட் இருப்பு உள்ளது.
  • தெலங்கானா: 2019 அக்டோபரில் ஏராளமான சட்டவிரோத அமோனியம் நைட்ரேட்டை மீட்டனர். ஒரு கிடங்கின் உரிமையாளர் 400 மெட்ரிக் டன் சேமிப்பு திறனுக்கான உரிமம் வைத்திருந்தார். ஆனால், அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டார்.
  • ராஜஸ்தான்: ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தின் பைத்து காவல் நிலையத்தில் 20 டன் அமோனியம் நைட்ரேட் 4 ஆண்டுகளுக்கும் மேலாக கிடந்துள்ளது.
  • ஒடிசா: கஞ்சம் மாவட்டத்தின் கோபால்பூர் கிராமத்தில் 196 குவிண்டால் சட்டவிரோதமாக சேமிக்கப்பட்ட அமோனியம் நைட்ரேட், 3,200 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 10,406 டெட்டனேட்டர்கள் சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப்) மூலம் பறிமுதல் செய்யப்பட்டன.
  • ஜார்கண்ட்: ஆகஸ்ட் 2018ஆம் ஆண்டில், பாகூர் மாவட்டத்தின் ஷாப்பூர் கிராமத்தில் அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடிபொருட்களை காவல் துறையினர் கண்டெடுத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.