டெல்லி: ஸ்பூட்னிக்-வி கூறுகளைக் கொண்டு தடுப்பூசி சோதனையில் அஸ்ட்ராஜெனெகா ஈடுபடவுள்ளது.
ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் முன்மொழிதலை ஏற்று அஸ்ட்ராஜெனெகா இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பயன்படுத்துவதன் மூலம், அஸ்ட்ராஜெனெகாவின் விஞ்ஞானிகள் தங்கள் தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
கரோனா நோய்க் கிருமிக்கு எதிராக ஸ்பூட்னிக் வி 90% விழுக்காடு அளவு செயல்திறனைக் காட்டியுள்ளதாக ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் தெரிவித்திருக்கிறது.