இந்தியாவில் 2014 - 2015 காலகட்டத்தில் கைப்பேசி சந்தையில் பெரும்பங்கைக் கொண்டிருந்த மைக்ரோமேக்ஸ் நிறுவனம், பின்னர் சீன நிறுவனங்களின் வருகையால் வலுவிழந்துபோனது. இச்சூழலில் இக்கால பயனர்களுக்கு ஏற்ப, தனது ‘இன்’ தொகுப்புகளான ‘இன் நோட் 1’, ‘இன் 1பி’ ஆகிய கைப்பேசிகளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனங்களின் முன்பதிவு வரும் நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மைக்ரோமேக்ஸ் இன் 1பி சிறப்பு அம்சங்கள்:
6.52 இன்ச் வாட்டர் ட்ராப் டிஸ்பிளே
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 35 SoC
13 எம்பி, 2எம்பி என இரண்டு பின்புற கேமரா
8எம்பி செல்பி கேமரா
2 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம்
ரிவர்ஸ் சார்ஜிங் வசதி (இந்த கைப்பேசியைக் கொண்டு பிற தகவல் சாதங்களை மின்னூட்டலாம்)
5000mah பேட்டரி
மைக்ரோமேக்ஸ் இன் 1பி விலை
2ஜிபி + 32ஜிபி : ரூ. 6,999
4ஜிபி + 64ஜிபி : ரூ. 7,999
மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 சிறப்பு அம்சங்கள்:
6.67 இன்ச் முழு-எச்டி டிஸ்பிளே
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 85 SoC பிராசஸர்
4 ஜிபி ரேம்
48 எம்பி, 5 எம்பி, 2எம்பி, 2எம்பி என நான்கு பின்புற கேமராக்கள்
16எம்பி செல்பி கேமரா
5000mah பேட்டரி
பாஸ்ட் சார்ஜிங்
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் வருகிற நவம்பர் 24,26 ஆம் தேதிகளில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு நிச்சயமாக அப்டேட்ஸ் கிடைக்கும் என நிறுவனம் தரப்பில் உறுதிப்படுத்தியுள்ளனர்.