டெல்லி: சீனாவின் பிபிகே நிறுவனத்தின் கிளை நிறுவனமான ரியல்மீ தனது எக்ஸ்7, எக்ஸ்7 ப்ரோ ஆகிய புதிய இரண்டு ஸ்மார்ட் கைப்பேசிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.
இந்திய பயனர்களின் பெரும் ஆதரவை பெற்ற ரியல்மீ நிறுவனம், அடுத்தடுத்து புதிய கைப்பேசிகளை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது தனது 5ஜி கைப்பேசிகளை சந்தையில் வெளியிடவுள்ளது. பிற ஸ்மார்ட் கைப்பேசிகளை போலில்லாமல், மீடியாடெக் நிறுவனத்தின் டைமன்சிட்டி 800, 1000+ ஆகிய சிப்செட்டுகளை கொண்டு இந்த கைப்பேசிகள் வெளிவருகிறது.
விவோ ஒய் 20ஜி பட்ஜெட் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்!
அமோலெட் தொடுதிரையுடன் வரும் இந்த கைப்பேசிகளில் 5ஜி இணைப்பு வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 2.4 ஜிகா ஹெட்ஸ் அளவுக்கு இதன் செயல்திறன் இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கைப்பேசிகள் குறித்த கூடுதல் தகவல்களை, நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.