ETV Bharat / lifestyle

ஆப்பிரிக்காவில் தயாரிக்கப்பட்ட முதல் ஸ்மார்ட்ஃபோன்!

ஆப்பிரிக்காவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ஸ்மார்ட்ஃபோனை ரவண்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

mara x
author img

By

Published : Oct 8, 2019, 11:13 PM IST

ரவண்டா நிறுவனம் மாரா X (Mara X) மற்றும் மாரா Z (Mara Z) என்று இரண்டு ஸ்மார்ட்ஃபோன் மாடல்களை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்பேன் மாடல்கள்தான் ஆப்பிரிக்காவிலேயே தயாரிக்கப்படும் முதல் ஸ்மார்ட்போன் மாடல்கள் என்று கூறியுள்ளார் ரவண்டா நிறுவனத் தலைவர் பால் ககாமே.

மேலும் அவர், ஏற்கனவே சில ஸ்மார்ட்ஃபோன் நிறுவனங்கள் எகிப்து, எத்தியோபியா, அல்ஜீரியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களை அசெம்பில் (Assemble) செய்தாலும், அவற்றின் மூலப்பொருட்களான மதர் போர்ட்(Mother Board) உள்ளிட்டவை இறக்குமதியே செய்யப்பட்டு வருவதாகவும் ஆனால் இந்த ஸ்மார்ட்ஃபோன் மாடல்களின் அனைத்து பகுதிகளும் ஆப்பிரிக்காவிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகவும் கூறினார்.

rawanda
ரவண்டாவின் புதிய தொழிற்சாலை

இதற்காக 2 கோடியே நாற்பது லட்சம் டாலர் செலவில் கட்டப்பட்ட புதிய தொழிற்சாலையில் நாள் ஒன்றுக்கு 1,200 ஸ்மார்ட்ஃபோன்கள் வரை தயாரிக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாரா X ஸ்மார்ட்ஃபோன் இந்திய மதிப்பில் ரூ. 2,700க்கும், மாரா Z ரூ. 3,860க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

இதையும் படிக்கலாமே: இந்த மாதமும் கார் உற்பத்தி குறைவு... தொய்வில் மாருதி நிறுவனம்!

Intro:Body:

Africa first smartphone

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.