ஓப்போ நிறுவனம் Reno 2 மற்றும் Reno 2F என்ற இரண்டு புதிய மொபைல்ஃபோன்களை கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியிட்டது. கேமரா விரும்பிகளை குறிவைத்து வெளியிடப்பட்ட இந்த மொபைல் மீதான ஆர்வம் பயனாளர்களிடையே அதிகரித்தது.
- 6.53 இன்ச் அமோலேட் டிஸ்பிளே
- மீடியாடெக் ஹீலியோ P70 பிரசஸார்
- பாதுகாப்பிற்குக் கொரில்லா க்ளாஸ் வசதி
- பின்புறம் 48 மெகாபிக்சல் கேமரா + 8 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா
- முன்புறம் 16 மெகாபிக்சல் பாப் அப் கேமரா
- 4,000mah பேட்டரி
- அதிவேக வூக் சார்ஜ் (VOOC Charge)
- ஆண்ட்ராய்டு 9 பை-ஐ மையமாக வைத்து ஓப்போ உருவாக்கியுள்ள கலர் 6.1 இயங்குதளம்
- வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில் வெளியாகியுள்ளது
8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜை கொண்ட இந்த மொபைல் ரூ. 25,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று நள்ளிரவு 12 மணிக்கு இதன் விற்பனை அமேசானில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென்று மாலையே அமேசானில் இதன் விற்பனை திடீரென தொடங்கியுள்ளது.
இதையும் படிக்கலாமே: ஆறு கேமராக்களுடன் வெளியானது Vivo V17 Pro!