கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. இதுவரை இந்தியாவில் 1,071 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 29 பேர் உயிரிழந்தனர்.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு பொதுமக்களும் நிறுவனங்களும் தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துளளார். அதற்கான வங்கி கணக்குகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமரின் நிவாரண நிதிக்கும் உத்தரப் பிரதேச முதலமைச்சரின் நிவாராண நிதிக்கும் ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக பிரபல சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஓப்போ அறிவித்துள்ளது.
வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடுபவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நிதியுதவி செய்வதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறு சிறு பிரச்னைகளை சரி செய்யவும் சாப்ட்வோர் தொடர்பான பிரச்னைகளை சரி செய்யவும் ஆன்லைன் சர்வீஸ் சென்டர்களையும் உருவாக்கியுள்ளதாகவும் ஓப்போ தெரிவித்துள்ளது.
-
Here's to standing together. To support India's battle against #COVID19, we are donating INR 1 Crore during this tough time. We urge you all to #StayHomeStaySafe and defeat this unprecedented pandemic together. #OPPOStands4India pic.twitter.com/K1fgtJfMGm
— OPPO India (@oppomobileindia) March 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Here's to standing together. To support India's battle against #COVID19, we are donating INR 1 Crore during this tough time. We urge you all to #StayHomeStaySafe and defeat this unprecedented pandemic together. #OPPOStands4India pic.twitter.com/K1fgtJfMGm
— OPPO India (@oppomobileindia) March 29, 2020Here's to standing together. To support India's battle against #COVID19, we are donating INR 1 Crore during this tough time. We urge you all to #StayHomeStaySafe and defeat this unprecedented pandemic together. #OPPOStands4India pic.twitter.com/K1fgtJfMGm
— OPPO India (@oppomobileindia) March 29, 2020
முன்னதாக, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக ஓப்போ நிறுவனம் தனது அனைத்து வகையான நிகழ்ச்சிகளையும் ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: கரோனா - பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 500 கோடி அளித்த பேடிஎம்