ETV Bharat / lifestyle

இந்தியர்களின் தகவல்களைத் திருடுகிறதா சியோமி?

பிரவுசர்களின் மூலம் இந்தியர்களின் தகவல்களை எம்ஐ நிறுவனம் திருடுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவர் மனு குமார் ஜெயின் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Manu Jain
Manu Jain
author img

By

Published : May 3, 2020, 2:18 PM IST

கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால், இணையப் பயன்பாடு 30 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான எம்ஐ தனது பிரவுசர்களின் உதவியுடன் இந்தியர்களின் தகவல்களைத் திருடி சீனாவுக்கு அளிப்பதாக இணையத்தில் போலி செய்திகள் பரவின.

இந்தப் போலி செய்திகளால் பலரும் இணையத்தில் எம்ஐ பிரவுசர்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று பதிவிடத் தொடங்கினர்.

இந்தச் செய்திகள் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருந்த எம்ஐ நிறுவனம், தற்போது இந்தச் செய்திகள் போலியானவை என்று கூறியுள்ளது. எம்ஐ பிரவுசர்களின் பாதுகாப்பு குறித்து விளக்கும் ஒரு சிறு காணொலி தொகுப்பை எம்ஐ நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவர் மனு குமார் ஜெயின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  • Mi Fans, I shot a video explaining false news regarding Mi Browser. Watch it: https://t.co/JJNqcXDCp2

    I repeat, Mi Browser & all Mi internet products are 100% safe. Moreover all data of Indian users is stored locally in India!

    Pls don’t believe incorrect news!#Xiaomi ❤️ (2/2) https://t.co/P93IxWSfjq

    — Manu Kumar Jain (@manukumarjain) May 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் அதில், "எம்ஐ நிறுவனம் டேட்டா பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்திய வாடிக்கையாளர்களின் தகவல்கள் இந்தியாவிலேயே சேமிக்கப்பட்டுவருகின்றன. அனுமதியின்றி யாருடையே டேட்டாக்களையும் நாங்கள் சேகரிக்க மாட்டோம்.

சேகரிக்கப்படும் டேட்டாக்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் டேட்டாக்கள் இந்தியாவிலேயே சேமிக்கப்பட்டுள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.

  • At #Xiaomi, data privacy & security are of utmost importance!@XiaomiIndia had moved all it's data to local servers in #India ~2 years ago.

    * We do NOT collect data w/o consent
    * Data is encrypted
    * India data stays in India

    News article from 2 yrs ago: https://t.co/kcghUcZiUu

மனு குமார் ஜெயின் விளக்கத்தைத் தொடர்ந்து சியோமி, ரெட்மி உள்ளிட்ட எம்ஐ ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துபவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: விமான எரிபொருள் விலை கடும் சரிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.