ETV Bharat / lifestyle

கூகுளின் அடுத்த மொபைல்போன் இந்தியாவுக்கு வராது!

கூகுள் நிறுவனத்தின் அடுத்த மொபைல்போன் மாடல்கள் இந்தியாவுக்கு விற்பனைக்கு வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

google pixel 4
author img

By

Published : Oct 20, 2019, 7:00 PM IST

அல்ப்பாபேட் (Alphabet) நிறுவனத்தின் அடுத்த மொபைல் மாடல்களான Google Pixel 4 மற்றும் Pixel 4 XL ஆகியவை கடந்த வாரம் நியூயார்கில் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 90hz டிஸ்பிளே, ஆண்டிராய்டு 10 இயங்குதளம் என்று பல அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் இந்த மொபைல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மொபைலின் முக்கிய அம்சமே இதிலுள்ள சோலி ரேடார் சிப். மொபைலை தொடாமலேயே நமது கையசைவுகளின் மூலம் வரும் கால்களை கட் செய்வது, பாடல்களை மாற்றுவது போன்ற பல செயல்களை மேற்கொள்ளலாம்.

இப்படி ஏகப்பட்ட சிறப்பம்சங்களை கொண்ட Pixel 4, Pixel 4 XL மொபைல்கள் வெளியாகும் 53 நாடுகள் பட்டியலில் இந்தியா இல்லை. இது இந்திய கூகுள் ரசிகர்களுக்குப் பேரிடியாக அமைந்தது.

google pixel 4
google pixel 4
இதிலுள்ள சோலி ரேடார் சிப் தொழில்நுட்பம்தான், இது இந்தியாவில் வெளியாகாமல் இருக்க காரணம். ஆம், இந்த புதிய சோலி தொழில்நுட்பம் 60GHz அலைவரிசையில் இயங்குகிறது. ஆனால் இந்த 57 - 6GHz அலைவரிசைகள் இந்தியாவில் ராணுவ பயன்பாட்டில் உள்ளது. இதனால் இந்தியாவில் இந்த சோலி ரேடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தமுடியாது. இது ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும், கூகுளின் முந்தை மொபைல்களான Google Pixel 1, Google Pixel 2, Google Pixel 3 ஆகியவை இந்தியாவில் சரியான வரவேற்பைப் பெறாமல் போனதாலே Google Pixel 4, Google Pixel 4XL இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
google pixel 4
google pixel 4
ஆனால் கூகுள் நிறுவனமோ, எந்த காரணத்தையும் குறிப்பிடாமல் இந்தியாவில் Google Pixel 4, Google Pixel 4XL மொபைல்கள் வெளியாகாது என்ற பொதுவான அறிவிப்பை மட்டும் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: பெரு நிறுவனங்களுக்கு டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லை!

Intro:Body:

google pixel 4 not available in india

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.