ETV Bharat / lifestyle

ஐபோனின் மலிவான ஸ்மார்ட்போன் விலை இவ்வளவா?

வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மற்றும் மலிவான ஸ்மார்ட்போன் மாடலான ஐபோன் எஸ்சி(2020) வெளியாகியுள்ளது.

iPhone SE
iPhone SE
author img

By

Published : Apr 17, 2020, 4:18 PM IST

Updated : Apr 17, 2020, 4:36 PM IST

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகெங்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அதன் கட்டமைப்பு புதிய தொழில்நுட்பங்களும் மற்ற ஸ்மார்ட்போன்களிடமிருந்து ஐபோன்களை தனித்துக்காட்டுகிறது. இருப்பினும் ஐபோன்களின் அதிக விலை காரணமாகப் பலரும் இதை வாங்கத் தயக்கம் காட்டுவார்கள்.

இந்நிலையில் பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் எஸ்.சி.(2020) என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை ஆப்பிள் நிறுவனம் கடந்த புதன்கிழமை வெளியிட்டுள்ளது. தற்போது விற்பனையாகிவரும் ஐபோன்களில் இந்த ஐபோன் மாடலின் விலைதான் குறைவானது.

இந்த ஐபோன் எஸ்.சி மாடலின் தோற்றம் 2017ஆம் ஆண்டு வெளியான ஐபோன் 8 மாடலைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஐபோனில் புதிய ஐபோன் 11 மாடலிலுள்ள பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது இதன் சிறப்பு. மேலும், ஐபோன் ரசிகர்களுக்குப் பிடித்த டச் ஐடி ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரும் இதில் உள்ளது.

iPhone SE (2020) சிறப்பம்சங்கள்

  • 4.7 6.55 இன்ச் டிஸ்ப்ளே
  • புதிய A13 பயோனிக் சிப்
  • பின்புறம் 12 மெகாபிக்சல் கேமரா
  • முன்புறம் 7 மெகாபிக்சல் கேமரா
  • ஐஓஎஸ் இயங்குதளம்
  • நிறங்கள் - கருப்பு, வெள்ளை, சிவப்பு

வழக்கம்போல ஐபோன் எஸ்.சி மாடலின் பேட்டரி குறித்த தகவல்களை ஆப்பிள் அறிவிக்கவில்லை. இருப்பினும், ஐபோன் 8 மாடலின் பேட்டரி அளவுக்கு ஈடாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை

  • 64 ஜிபி மாடலின் விலை ரூ.42,500
  • 128 ஜிபி மாடலின் விலை ரூ.47,800
  • 256 ஜிபி மாடலின் விலை ரூ.58,300

அமெரிக்காவில் ஏப்ரல் 24ஆம் தேதி முதல் ஐபோன் எஸ்.சி விற்பனைக்கு வரவுள்ளது. இருப்பினும் இந்த மாடல் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இதையும் படிங்க: கரோனா காலத்தில் வெளியான ஒன்பிளஸ் மொபைல்! எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யுமா?

Last Updated : Apr 17, 2020, 4:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.