டெல்லி: கொரிய நிறுவனம் சாம்சங், தனது 'தி ஃபிரேம் டிவி'இன் புதிய பதிப்பை இந்தியாவில் ரூ.61,990 என்ற தொடக்க விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
அமேசான், பிளிப்கார்ட், சாம்சங் இந்தியா ஆகிய தளங்களில் இதனை பதிவுசெய்து பெற்றுக் கொள்ளலாம். ஜூன் 12ஆம் தேதி முதல் சந்தைக்கு வரும் தி ஃப்ரேம் டிவி, 43” அங்குலம், 50” அங்குலம், 55” அங்குலம், 65” அங்குலம் ஆகிய அளவுகளில் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
இதே ரகத்தின் 2020 பதிப்பை விட 46% விழுக்காடு மெலிதாக 2021ஆம் ஆண்டின் பதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. 4கே காட்சி தரம், தெளிவான ஒலியமைப்பு என அசத்தும் இந்த டிவியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது, பயனர்களுக்கு பிடித்த வகையில் சட்டகங்களை மாற்றுவது தான்.
சாம்சங் தி ஃபிரேம் டிவி சிறப்பம்சங்கள்
- அனைத்து மாடல்களிலும் 4 கே கியூ எல்இடி திரை
- சாம்சங்கின் குவாண்டம் 4 கே ஏஐ ப்ராசஸர் / இது அனைத்து காட்சிகளையும் 4கே தரத்திற்கு உயர்த்தும்
- ஒளி உணரிகள் (ஆம்பியண்ட் லைட் சென்சார்)
- நகர்வு உணரிகள் (மோஷன் சென்சார்) வழியாக டிவி அருகில் யாரும் இல்லாதபோது பேனலை மங்கச் செய்யும் அம்சம்
- இதன் ஒன் கனெக்ட் பாக்ஸ் (One Connect box) கேபிள் மேனேஜ்மேன்ட்டை முழுவதுமாக எளிதாக்குகிறது
- ஏர்ப்ளே 2.0 செயலி அனுமதி / இது ஐபோன் பயனர்களை டிவியுடன் இணைப்பில் இருக்க உதவுகிறது
- சாம்சங் சூரிய மின்சக்தி ரிமோட் / இது வழக்கமான பேட்டரிகளின் பயன்பாட்டை நீக்கி, சுற்றுப்புற ஒளியுடன் தன்னை ரீசார்ஜ் செய்து கொள்ளும்
- டிவியின் சட்டகங்களை விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும் வசதி
- 'ஆர்ட் மோட்' மூலம் டிவியை சுவற்றில் இருக்கும் புகைப்பட சட்டம் போல் மாற்றியமைக்கலாம் / திரையில் அதற்கேற்ற படங்களை மாற்றும் வசதியும் உள்ளது
- விலை: ரூ.61,990 முதல் தொடங்குகிறது