ETV Bharat / lifestyle

ஜாய்ஸ்டிக் மட்டும் போதும்; இனி அதிரடியான எக்ஸ் பாக்ஸ் விளையாட்டுகள் உங்கள் டிவியில்!

மைக்ரோஃப்ட் எக்ஸ் பாக்ஸ் விளையாட்டு கருவியின் பயன்பாட்டை குறைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனைத் தவிர்த்து கணினி, டிவிக்களில் மென்பொருளை நிறுவி, மேகக் கணினி முறையில் விளையாட்டுகளை பயனர்களுக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Microsoft, Xbox gaming, web connected TVs, xCloud, xCloud streaming technology, Xbox Game Pass, Xbox, Microsoft Xbox,  அதிரடியான எக்ஸ் பாக்ஸ், எக்ஸ் பாக்ஸ் விளையாட்டு, இணைய விளையாட்டு, மேகக் கணினி விளையாட்டுகள், எக்ஸ் பாக்ஸ் விளையாட்டுகள், மைக்ரோசாப்ட், மைக்ரோசாஃப்ட் எக்ஸ் கிளவுட், சோனி பிளே ஸ்டேஷன், மைக்ரோசாப்ட் எக்ஸ் பாக்ஸ், டெக் செய்திகள், லேட்டஸ்ட் டெக், technology news tamil, science news tamil, tamil tech, latest tech tamil
மைக்ரோசாப்ட் எக்ஸ் பாக்ஸ்
author img

By

Published : Jun 13, 2021, 6:05 PM IST

டெல்லி: விளையாட்டு பிரியர்களுக்கு இனிப்பான செய்தியாக, எக்ஸ் பாக்ஸ் விளையாட்டுகளை டிவிக்களில் நிறுவ மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த முடிவின் படி, எக்ஸ் பாக்ஸ் விளையாட்டு கருவிகள் வாங்க இயலாத மக்கள், டிவி, கணினி மூலம் வெறும் ஜாய்ஸ்டிக் மட்டும் கொண்டு விளையாட முடியும். இதற்கான மேகக் கணினி புதுபித்தல் முறை குறத்து மைக்ரோசாப்ட் நிறுவனம் செயலாற்றிவருகிறது.

அதுமட்டுமில்லாமல், டிவி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறது. டிவி மற்றும் கணினிகளில் மென்பொருளை நிறுவுவதன் மூலம், இணைய வசதி கொண்டு மேகக் கணினியில் உள்ள விளையாட்டுகளை ஸ்ட்ரீமிங் செய்ய முடியும்.

அம்சங்களுக்கு குறைவில்லை... ஜியோனியின் அசத்தலான ஸ்மார்ட் வாட்சுகள்!

இதற்கு ஜாய்ஸ்டிக் மட்டும் இருந்தால் போதும். பொதுவாக எக்ஸ் பாக்ஸ், போட்டியாளர் சோனி பிளே ஸ்டேஷன் ஆகிய விளையாட்டு கருவிகளை வாங்க பயனர்களுக்கு பேரார்வம் இருக்கும்.

பல்லாயிரம் விலை மதிப்பில் சந்தைப்படுத்தப்படும் இதனை வாங்க அனைவராலும் முடிவதில்லை. எனவே, இந்த புதிய திட்டத்தின் மூலம் மைக்ரோசாப்ட் எக்ஸ் பாக்ஸ் பயனர்களை அதிகரிக்க நிறுவனம் முனைப்புக் காட்டி வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.