எனக்கு எந்த நோயும் இல்லை என ஒருவர் கூறுவது மட்டும் ஆரோக்கியமாகி விடாது. ஒருவர் மனநலம், உடல் நலம், சமூக நலம் என மூன்றையும் சரியாகப் பெற்றிருந்தால் மட்டுமே அவரை ஆரோக்கியமானவராக கருத முடியும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
‘மனம்’ என்பது மூளை சம்பந்தப்பட்டது. மூளையின் செயல்பாடுதான் மனதாக உணரப்படுகிறது. தேவையற்ற கவலைகள். நிறைவேறாத ஆசைகள், நீண்ட கால சோகம், வேலையின்மை, ஏமாற்றம், ஏக்கம், தோல்விகள், அதிகமான மதுப்பழக்கம், எதிலும் பிடிப்பு இல்லாமல் இருப்பது ஆகியவை மன அழுத்தம் உருவாவதற்கு காரணமாகிறது. இதுதவிர 200-க்கும் மேற்பட்ட மனநோய்கள் உள்ளன.
மனநோய் என்பது ஒரு சமூக நோய். குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லோரையும் தாக்கும் மனநோயையும், அதன் அறிகுறிகளையும் தெரிந்துகொள்வதே, அதிலிருந்து மீள்வதற்கான முதல்படி. ஒருவரின் சிந்தனையில், செயலில், நடத்தை மற்றும் உணர்வுகளில், பிறரைவிட வித்தியாசமோ, தீவிரமோ தெரிந்தால், அது மனநலப் பிரச்னையின் அறிகுறியாகவே இருக்கும். உலகளவில் 45 கோடி மக்கள் மனநல கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கூகுளின் பிரதான புதிய பிக்சல் போன்கள் 5ஜி இணைப்புடன்!
இப்பேர்பட்ட மனநலம் சார்ந்திருக்கும் பிரச்னைகளை களையவும், மனதிற்கு வலுவூட்டும் விதமாகவும், மனநல பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு ஊக்கமளிக்கவும் பச்சை நிற ரிப்பன் வடிவிலான எமோஜியை ட்விட்டர் தனது பக்கத்தில் வெளியிட்டு சிறப்புப்படுத்தியுள்ளது. மேலும், பயனர்களுக்காக #WMHD2020, #WorldMentalHealthDay, #LetsTalk, #MentalHealthForAll, #MentalHealth ஆகிய ஹேஷ்டேக்குகளையும் ட்விட்டர் வெளிப்படுத்தியுள்ளது.