வாட்ஸ்அப் தொடர்பான அனைத்து தகவல்களையும் கண்காணிப்பதற்கு பெயர் போன வலைத்தளமான WaBetaInfo, வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் சில அம்சங்களைப் பற்றி விவாதிக்க வாட்ஸ்அப் தலைமை நிர்வாக அலுவலரான வில் கேத்கார்ட், பேஸ்புக் தலைமை நிர்வாக அலுவலர் ஆகியோரை அணுகியுள்ளது.
அதில், வாட்ஸ்அப் செயலியில் டிஸ்அப்பியரிங் மோட் (Disappearing mode), வீவ் ஒன்ஸ் (View once), மிகவும் எதிர்பார்க்கப்படும் பல தகவல் சாதனங்களின் ஆதரவு (Multi device) ஆகிய மூன்று அம்சங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
வாட்ஸ்அப் ஏற்கனவே கடந்த ஆண்டு டிஸ்அப்பியரிங் மெசேஜஸ் அம்சத்தினை அறிமுகம் செய்திருந்தது. இந்த அம்சம் ஏழு நாள்களுக்குப் பிறகு சாட்டில் இருந்து மெசேஜ்கள் தானாக மறைந்துவிடுவதை உறுதிசெய்தது.
அடுத்ததாக வாட்ஸ்அப் "வியூ ஒன்ஸ்" என்கிற அம்சத்தை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது, இது ஒரு நபர் உங்கள் மெசேஜை ஒருமுறை பார்த்தபின் அது தானாகவே மறைந்து போகும்.
வாட்ஸ்அப்பிற்கு வரும் மற்றொரு பெரிய அப்டேட்டான, மிக நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் மல்டி டிவைஸ் ஆதரவாகும். இந்த அம்சம் சில காலமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. மேலும் இது இரண்டு மாதங்களுக்குள் பப்ளிக் பீட்டாவில் வெளிவருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.