ETV Bharat / lifestyle

10 கோடி முதலீடுகளை ஈர்த்த டிக்டாக் மாற்று செயலி சிங்காரி! - தற்சார்பு இந்தியா

இந்தியாவில் குறு காணொலி பகிர்வு தளமாக வலம்வரும் ‘சிங்காரி’ செயலி 10 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளது. இந்த செயலியானது, ஜூலை 4 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட தற்சார்பு இந்தியா திட்ட செயலியில் ‘புதுமைக்கான சவால்’ போட்டியில் சமூக பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது.

சிங்காரி செயலி
சிங்காரி செயலி
author img

By

Published : Aug 10, 2020, 5:57 PM IST

இந்திய குறு காணொலி பகிர்வு செயலியான சிங்காரி, டிக்டாக்கிற்கு மாற்றாக பயனர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றது. இவ்வேளையில் ஏஞ்சலிஸ்ட் இந்தியா, உட்சவ் சோமானிஸ் ஐசீட், வில்லேஜ் குளோபல், லாக்எக்ஸ் வென்ச்சர்ஸ் மற்றும் ஜாஸ்மிந்தர் சிங் குலாட்டி மூலமாக சுமார் ரூ .10 கோடி திரட்டியுள்ளது.

முதலீட்டாளர்கள் எங்கள் செயலியின் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சிங்காரி பயணத்தில் அவர்கள் இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று செயலியின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அலுவலருமான சுமித் கோஷ் தெரிவித்திருக்கிறார்.

டிக்டாக் செயலிக்கான இந்தியாவின் மாற்று செயலி என்று விளம்பரப்படுத்தப்பட்ட ‘சிங்காரி’ செயலியை, டிக்டாக் தடைசெய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் பேர் பதிவிறக்கம் செய்தனர். இந்தச் செயலி முதன்முதலில் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கூகுள் ப்ளே ஸ்டோரில் வெளியிடப்பட்டது. அப்போது யாரும் இந்த செயலியை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

டிக்டாக் தடை எதிரொலி : ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் பதிவிறக்கங்கள் கண்ட இந்தியாவின் ’சிங்காரி’!

ஆனால், தற்போது டிக்டாக் தடை செய்யப்பட்டதால், ஒரே இரவில் சிங்காரி செயலி பயனர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்து அதிகப்படியான பதிவிறக்கங்களை கண்டுவருகிறது. சிங்காரி செயலி பெங்களூருவைச் சேர்ந்த பிஸ்வத்மா நாயக், சித்தார்த் கவுதம் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இந்தச் செயலியானது தமிழ், குஜராத்தி, கன்னடம், மராத்தி, பஞ்சாபி, மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் செயல்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.