பிளாக் ராக் என அழைக்கப்படும் இந்த மால்வேர், பேங்கிங் ட்ரோஜன் ஆகும். பேங்கிங் ட்ரோஜன் என்றாலும் இது பேங்கிங் அல்லாத செயலிகளையும் குறிவைக்கிறது. முதலில் கூகுள் அப்டேட் போன்று இயங்கி தேவையான அனுமதி பெறப்பட்டதும், ஆப் டிராயரில் இருந்து ஐகானை மறையச் செய்து தகவல் சேகரிக்கும் பணிகளைத் தொடங்குகிறது.
நெதர்லாந்தைச் சேர்ந்த திரெட்ஃபேப்ரிக் எனும் சைபர் செக்யூரிட்டி ஆய்வு நிறுவனம் மே மாதத்தில் பிளாக் ராக் மால்வேர் விவரங்களைக் கண்டறிந்தது. இது பயனர் குறியீடு, கடவுச்சொல், கிரெடிட் கார்டு விவரங்களைத் திருடும் திறன் கொண்டிருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
நுகர்வோரின் நம்பிக்கையை வென்றெடுக்கும் இந்தியா!
வழக்கமான ஆண்ட்ராய்டு ட்ரோஜன் செயலிகளைப் போன்றே பிளாக் ராக் மால்வேர் இருக்கிறது. எனினும், இது 337 செயலிகளைக் குறிவைத்துச் செயல்படுகிறது. இது வழக்கமான மால்வேர்களை விட அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.