கணினி உலகில் கொடிகட்டி பறக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம், அவ்வப்போது புதிய சாப்ட்வேர் அப்டேட்ஸ்களை வழங்கி பயனர்களை கவர செய்யும். அந்த வகையில், தற்போது புதிய அறிவிப்பில் பல பயனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் இணையதள உள்நுழைவு பயன்பாட்டிற்கு பயனர்களுக்கு உதவிய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோர் 11க்கு(Internet Explorer – IE ) 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17இல் விடைகொடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.
இதுமட்டுமின்றி மைக்ரோசாப்டின் 365 செயலிகளும் நவம்பர் மாதம் 30ஆம் தேதி முதல் படிப்படியாக சேவைகள் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளது. இந்த தேதிகளுக்கு பிறகு பயனர்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை பயன்படுத்தினால் மிகவும் மோசமான நெட்வொர்க் ஸ்பீடு தான் கிடைக்கப்படும். எனவே, மைக்ரோசாப்ட் சேவைகளை உபயோகிக்க விரும்புவோர் மைக்ரோசாப்ட் எட்ஜ் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விண்டோஸ் 10 வெர்ஷன் 20H2 அப்டேட் செய்தவர்களுக்கு புதிய மைக்ரோசாப்ட் எட்ஜ் வசதி வழங்கப்படுகிறது. விண்டோஸ் 10 வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் புதிய சேவைக்கு மாறியுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் வரும் மார்ச் 9, 2021இல் எட்ஜ் லெகஸி டெஸ்க்டாப் பயன்பாடை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்டுள்ள தேதிக்கு பிறகு மைக்ரோசாப்ட் எட்ஜ் லெகஸி டெஸ்க்டாப்ப சேவைக்கு புதிய பாதுகாப்பு அப்டேட்கள் ஏதுவும் வராது. புதிய மைக்ரோசாப்ட் எட்ஜில் முந்தைய மைக்ரோசாப்ட் எட்ஜூக்காக உருவாக்கப்பட்ட தளங்கள், செயலிகள் தடையின்றி உபயோகிக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர்.