ஃபேஸ்புக் நிறுவனத்தின் புகைப்படம், காணொலி பகிரும் தனி செயலியான இன்ஸ்டாகிராம், தனது பயனர்களை கருத்தில்கொண்டும், சுற்றுபுறத்தில் நடக்கு சிறுகுறு பணியாளர்களை கருத்தில்கொண்டும் தனது செயலியில் உள்ளே உணவுகளை ஆர்டர் செய்யும் உள்ளீடுகளைப் புகுத்தியுள்ளது.
தற்போது இந்த அம்சங்கள் அமெரிக்கா, கனடா நாடுகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக லண்டனில் அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதனையடுத்து உலகளவில் இதனை விரிவுப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்கான பிரத்யேக ஸ்டிக்கர்ஸ், பொத்தான்களை செயலில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.