டெல்லி: வாட்ஸ்அப் நிறுவனம் அமல்படுத்திய புதிய தனியுரிமை கொள்கையைத் திரும்பப் பெறக் கோரி அந்நிறுவனத்திற்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
முன்னதாக சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகளில் செய்யப்பட்ட மாற்றங்களைத் திரும்பப் பெறுமாறு இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் வாட்ஸ்அப்பை வலியுறுத்தியிருந்த நிலையில், மீண்டும் அந்த அமைச்சகம் வாட்ஸ்அப்பிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமை கொள்கை இந்திய அரசியல் சட்டத்தின் பல பிரிவுகளை மீறுகிறது என்றும், தற்போது அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸுக்குப் பதிலளிக்க வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: அமலுக்கு வந்த வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை - மாற்றமா? ஏமாற்றமா?