இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் மோசமாகிவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு மாநிலங்களிலும் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு அவர்கள் தேர்ச்சியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரங்கு உத்தரவு காரணமாக மாணவர்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படக் கூடும் என்ற அச்சம் பெற்றோர் மத்தியில் நிலவுகிறது.
அந்த அச்சத்தை போக்கும் வகையில் தற்போது இந்தியாவின் பிரபல கற்றல் செயலியான பைஜூஸ், புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் பைஜூஸ் செயலியை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
பைஜூஸ் செயலியை ஸ்மார்ட்போனில் தரவிறக்கம் செய்து இந்த இலவச கற்றல் வகுப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா - ஸ்பைஸ்ஜெட் பணியார்களுக்கு சம்பளம் கட்!