பிங்க் வாட்ஸ்அப் (Pink WhatsApp) என்ற பெயரில் அல்லது வேறு ஏதேனும் பெயரில் செயலிகளை பதிவிறக்கம் செய்யுமாறு லிங்க் கிடைக்கப் பெற்றால் அவற்றை பயன்படுத்தவோ, மற்றவர்களுக்கு பகிரவோ வேண்டாம். உங்கள் தொலைபேசி ஹேக் (HACK) செய்யப்பட்டு தகவல்கள் அனைத்தும் திருடப்படும் என சென்னை அடையாறு துணை ஆணையர் விக்ரமன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், ”கடந்த சில நாட்களாகவே பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களில் பிங்க் வாட்ஸ்அப் என்ற ஒரு லிங்க் வைரலாக பரவி வருகிறது. அது வாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட் என சொல்லி பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த லிங்கை ஓப்பன் செய்து அதனை பதிவிறக்கம் செய்தால் புதிய அம்சங்களுடன் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தலாம் என்ற தகவலும் வலம் வந்தது.
இதனை நம்பி புது வாட்ஸ் அப் அம்சங்கள் கிடைக்கும் என பதிவிறக்கம் செய்தவர்களின் செல்ஃபோனில் நூதன வைரஸ் தாக்கம் ஏற்பட்டு, அதில் உள்ள டேட்டாக்கள் அனைத்தும் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த லிங்கை தொட்டாலே உடனடியாக பதிவிறக்கம் செய்தவர்கள் வாட்ஸ் அப் குழுக்களில் திடிரென பரவுவதாக சைபர் தொழில்நுட்ப வல்லுனர்களும் எச்சரித்துள்ளனர்.
கூகுள் பிளே மற்றும் ஆப்பிள் தளங்களில் கிடைக்கும் செயலிகளைத் தவிர்த்து வேறு எந்த ஒரு செயலிகளையும் பயனர்கள் போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். இந்த பிங்க் வாட்ஸப் செயலிகள் போனில் உள்ள போட்டோ, செய்திகள் என அனைத்து தரவுகளையும் சைபர் திருடர்கள் திருடுவதாக கூறுப்படுகிறது. அதனால் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் கிடைக்கும் செயலிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: அரபிக்கடலில் ரூ. 3 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்