டெல்லி: ஆண்ட்ராய்டு கைப்பேசி வங்கிச் சேவைகளுக்கான தீம்பொருள் “ஈவென்ட் பாட்”, பயனர்களின் நிதிப் பயன்பாட்டு தரவுகளைத் திருடி, ஹேக்கர்களுக்குப் பரப்பி வருகிறது என இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு (சிஇஆர்டி-இன்) எச்சரித்திருக்கிறது.
இந்த மொபைல் வங்கி ட்ரோஜன், ஆண்ட்ராய்டின் உள்ளமைக்கப்பட்ட அணுகல் அம்சங்களை திருடவும், பயனர்கள் தரவைத் திருடவும், பயனர் குறுந்தகவலைத் திருடவும், செய்திகளைப் படிக்கவும், குறுந்தகவலை இடைமறிக்கவும் இந்த தீம்பொருள் உதவுகிறது என்று சைபர் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆண்ட்ராய்டு கைப்பேசிகளின் இதுபோன்ற தீம்பொருள் ஊடுருவுவதைத் தடுக்கவும், பயனர்களுக்கு உதவவும், சைபர்-பாதுகாப்பு நிறுவனம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள பரிந்துரைத்துள்ளது.
- நம்பத்தகாத செயலிகளை பதிவிறக்கம் செய்து நிறுவ வேண்டாம் (அறியப்படாத வலைதளங்கள் / நேர்மையற்ற செய்திகளில் உள்ள இணைப்புகள் வழியாக பதிவிறக்கம்)
- ஆண்ட்ராய்டு சாதனங்களில் புதுப்பிக்கப்பட்ட வைரஸ் தடுப்பு செயலியை நிறுவவும் அந்நிறுவனம் பயனர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.