டார்க் வெப் என்பது இணையதளத்தின் ஒரு அங்கமாக இருந்தாலும், அனைவராலும் இந்த டார்க வெப்-க்கு செல்ல முடியாது. சர்வதேச அளவில் போதைப்பொருள், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் இந்த டார்க வெப்தான் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது, டார்க் வெப்பிலுள்ள ஜோக்கர்ஸ் ஸ்டாஷ் (Joker's Stash) என்ற தளத்தில் 13 லட்சம் இந்திய பயனாளர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் தகவல்கள் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 'INDIA-MIX-NEW-01' என்ற தலைப்பில் இந்தத் தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.
இந்தத் தகவல்கள் அனைத்தும் ஏடிஎம் மற்றும் கடைகளிலுள்ள POS சாதனங்களிலிருந்து பெறப்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு கார்டின் தகவல் 100 அமெரிக்க டாலருக்குத் விற்கப்படும் என்றும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜோக்கர்ஸ் ஸ்டாஷ் தளத்தில் முன்னதாக பிப்ரவரி மாதம் 21 லட்சம் அமெரிக்கர்களின் கார்ட் தகவல்களும் ஆகஸ்ட் மாதம் 53 லட்சம் அமெரிக்கர்களின் கார்ட் தகவல்களும் விற்பனைக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாட்ஸ்அப் பயனர்களைக் குறிவைக்கும் இஸ்ரேல் ஹேக்கர்கள்!