உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மஹா சனி பிரதோஷத்தை முன்னிட்டு பெருவுடையார் கோயிலின் பெருநந்திக்கு எண்ணெய் மற்றும் ஆயிரம் லிட்டர் பாலால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் நந்தியம் பெருமானுக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. ஆலயத்தில் குடமுழுக்கு விழா பிப்ரவரி 5ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து மண்டல பூஜைகள் அடுத்தடுத்த நாள்களில் நடைபெற்றன.
கும்பாபிஷேகத்திற்கு பிறகு வரும் முதல் சனி பிரதோஷம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நந்தி பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் பக்தி பரவசத்துடன் கலந்துகொண்டு நந்தியரை தரிசனம் செய்தனர்.