ETV Bharat / jagte-raho

பெரம்பலூர் அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு - மூவர் கைது! - இளைஞருக்கு அரிவாள் வெட்டு 3 பேர் கைது

பெரம்பலூர் அருகே இளைஞரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் மூன்று பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

youth attacked
youth attacked
author img

By

Published : Nov 28, 2020, 7:30 AM IST

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது வீட்டின் அருகே வசித்துவருபவர் ரமேஷ். இருவரும், டாடா ஏஸ் வாகனம் வைத்து தொழில் செய்து வருகின்றனர்.

இருவருக்கும் இடையில் தொழில் போட்டி இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் (நவ.26) இரவு ரமேஷ் தனது வாகனம் பழுதாகி இருப்பதாகவும், அதனால் மணிகண்டனிடம் உனது வாகனத்தை எடுத்துக் கொண்டு வா என்று ரமேஷ் கூறியுள்ளார். அப்போது மணிகண்டன் தனது வாகனமும் பழுதாகி இருப்பதாகக் கூறியபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அங்கு வந்த ரமேஷின் அப்பா சின்னப்பிள்ளை, அம்மா அக்கம்மாள் ஆகிய இருவரும் ரமேஷூடன் சேர்ந்து மணிகண்டனை அரிவாள் மட்டும் கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் மணிகண்டன் தலையில் அடிபட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மணிகண்டன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பெரம்பலூர் காவல் துறையினர் தாக்குதல் நடத்திய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பாலாற்று வெள்ளத்தில் இறங்கி 12 வயது சிறுவன் உயிரிழப்பு !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.