ETV Bharat / jagte-raho

துரோகம் இழைத்த நண்பன் - நட்பின் உதவியுடன் நண்பனை கொலை செய்த கும்பல்! - thoothukudi fishing harbour murder

சாம்சனும், கபில்தேவும் நண்பர்கள். சாம்சனின் நண்பருடன் கபில்தேவ் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கபில்தேவை துறைமுகம் பகுதிக்கு வரவழைத்த சாம்சன், அவரை தன் நண்பர்களுக்கு இரையாக்கியுள்ளார். தற்போது காவல் துறையினர் கொலையாளிகள் 6 பேரைத் தேடி வருகின்றனர்.

youngster killed by his friends in thoothukudi

author img

By

Published : Sep 14, 2020, 5:19 PM IST

தூத்துக்குடி: நள்ளிரவு இளைஞரை வெட்டி கொலை செய்த ஆறு பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதி நகரைச் சேர்ந்த கபில்தேவும் (வயது 27). முத்தையாபுரம் சுந்தர் நகரைச் சேர்ந்த சாம்சனும் (23) இணைபிரியா நண்பர்கள். நேற்றிரவு (செப் 13) தூத்துக்குடி கடை வீதியிலுள்ள துணிக் கடைக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த சாம்சனின் நண்பர் தாளமுத்து நகரைச் சேர்ந்த இஸ்ரவேல் (19) என்பருக்கும் கபில்தேவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கடையில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் நள்ளிரவில் சாம்சனுக்கு போன் செய்து, கபில்தேவை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு இஸ்ரவேல் கும்பல் வரவழைத்துள்ளனர். அப்போது கபில்தேவை, இஸ்ரவேல், சாம்சன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது.

இதைத்தொடர்ந்து சாம்சன் உள்பட 6 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தென்பாகம் ஆய்வாளர் ஆனந்தராஜன் ஆகியோருடன் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கபில்தேவ் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக தென்பாகம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ராஜவேல் உள்பட 6 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.