மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மேலபச்செறியை பகுதியில் வசித்துவருபவர்கள் குமார், தமிழரசி தம்பதி. இருவரும் டீக்கடையில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களின் 10 வயது மகள் நேற்று (அக்.21) மாலை 7 மணியளவில் வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது, கடையின் அருகில் நின்று கொண்டிருந்த ஓம்சக்தி நகரை சேர்ந்த முத்துராஜ்(29) என்பவர் சிறுமியை நோட்டமிட்டு மறைவான சந்துக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை செய்துள்ளார்.
இதையடுத்து சத்தமிட்ட சிறுமியின் குரலை கேட்டு அக்கம் பக்கத்தினர் முத்துராஜை பிடித்து மதுரை திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து சிறுமியின் தாய் தமிழரசி அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், முத்துராஜை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: உ.பியில் தொடரும் குற்றங்கள் - என்னதான் தீர்வு!