மேற்கு மாம்பலம், ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். தனியார் ரசாயன நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவருக்கும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நந்தினிக்கும் கடந்த ஓராண்டிற்கு முன்பு திருமணம் ஆனது. திருமணமாகி ஓராண்டு கடந்தும் குழந்தை இல்லாததால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஒரே வீட்டில் இருந்தும் ஒருவருக்கொருவர் சரியாக பேசிக்கொள்ளாமல் இருந்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மணிகண்டனுக்கு கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், இருவருக்கிமிடையே இருந்த பிரிவு மேலும் அதிகரித்துள்ளது. இதனால் கடும் மன அழுத்தத்தில் இருந்த நந்தினி, வீட்டிலேயே தூக்கிட்டு உயிரிழந்தார். இந்நிலையில், மணிகண்டன் அலுவலகம் சென்றிருந்த நிலையில் தகவலறிந்து பதறியடித்து வீட்டிற்கு வந்துள்ளார். தொடர்ந்து, சிறிது நேரத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இளம் தம்பதியினர் அடுத்தடுத்து ஒரே நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பு: எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல. தற்கொலை எண்ணங்களிலிருந்து மீள்வதற்கு, தனியார் தற்கொலை எண்ணங்கள் தடுப்பு அமைப்பான சினேகாவின் ’044 -24640060’ உதவி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். அதைத்தவிர, தமிழ்நாடு அரசின் உதவி எண் ’104’ க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.
இதையும் படிங்க: பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது!