ETV Bharat / jagte-raho

மரத்தில் பிணமாகத் தொங்கிய வட இந்திய பெண்!

ஆரல்வாய்மொழி அருகே மலை பகுதியில் தூக்கில் தொங்கியபடி வட இந்திய இளம்பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

women suicide in aralvaimozhi
women suicide in aralvaimozhi
author img

By

Published : Sep 28, 2020, 3:46 PM IST

கன்னியாகுமரி: வடமாநில இளம்பெண் மரத்தில் தூக்கில் சடலமாகத் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகே மலைப் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத புதர்களுக்கு இடையே மரத்தில் இளம்பெண்ணின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது. அவ்வழியாக சென்ற ஒரு இளைஞர் அதை கண்டு ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவலளித்தார்.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடலை கைப்பற்றி விசாரணை செய்தனர். அதனருகில் மது அருந்தியதற்கான தடயங்களும் காணப்பட்டன. முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் வடமாநிலத்தைச் சேர்ந்த ராணி(16) என்பதும், அவரது கணவர் ராமன் (18) என்பதும், ஒன்றரை வயது குழந்தையுடன் அருகிலுள்ள செங்கல் உற்பத்திக் கூடத்தில் தங்கி வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

காதல் திருமணத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூர கொலைகள்: குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை!

இன்று காலை கணவன், மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் கணவன் ராமன் சந்தைக்கு பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். வீடு திரும்பியபோது மனைவி ராணியை காணவில்லை. கணவன் மனைவிக்கு இடையே ஏற்கனவே பிரச்னை நிலவி வந்ததால், இந்தப் பெண் தற்கொலை செய்திருக்கலாம் என முதலில் கூறப்படுகிறது.

ஆனால், சற்று உயரமான மரத்தில் சேலையை கட்டி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதால், இவர் எப்படி மரத்தில் ஏறி சேலையைக் கட்டி தூக்கிட்டுகொண்டார் என்று காவல் துறையினர் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், அருகில் மது குப்பிகள் கிடந்ததால், இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்தினர், உடன் பணிபுரிந்தவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.