நாட்டில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்புணர்வு கொடூரங்கள் தற்போது அதிகரித்து கானப்படும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் மேலும் ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது. அம்மாநிலத்தில் தேஹ்ரி பகுதியில் 28வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண் குடும்பத்தினருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக வீட்டைவிட்டு வெளியேறி உத்தரகாண்ட் மாநிலத்தைச் சென்றடைந்த அவர், பயணத்தின் போது லாரி ஓட்டுனரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். லிப்ட் கொடுப்பதாகக் கூறி அப்பெண்ணிடம் ஓட்டுநர் இத்தகைய கொடூரத்தை செய்ததாக அம்மாநிலத்தில் உள்ள கண்டிசவுர் காவல்நிலைத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், பெண் குறித்த தகவலை உறவினரிடம் தெரிவித்துள்ளதாகவும் கண்டிசவுர் காவல்நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், குற்றச்செயலில் ஈடுபட்ட நபரை தீவிரமாகத் தேடிவருவதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே ஹைதரபாத், காஞ்சிபுரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட பல பகுதிகளில் பெண்களுக்கு எதிராக அரங்கேறிய பாலியல் குற்றச்செயல்கள் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: ''கொலைகாரப்பாவிக்கு பட்டம் கொடுத்து, பரிசு கொடுத்திருக்கிறார்கள்'' - கோத்தபயவை சாடிய வைகோ