ஆம்பூரை அடுத்த பெரியாங்குப்பத்தை சேர்ந்தவர்கள் பன்னீர் செல்வம் (57), பரமேஸ்வரி (49) தம்பதி. தனியார் காலணி தொழிற்சாலையில் பரமேஸ்வரி பணிபுரிந்த நிலையில், கட்டட மேஸ்திரியான பன்னீர் செல்வம் சில ஆண்டுகளாக வேலைக்கு செல்லமால் இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அதேபோல், நேற்றிரவும் வாய்த்தகராறு ஏற்பட்டு வெளியே சென்ற பன்னீர்செல்வம், இன்று காலை மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தூங்கிக் கொண்டிருந்த பரமேஸ்வரியின் கழுத்து மற்றும் தாடைப்பகுதியில் திருப்புளியால் குத்திய அவர், வாயில் இருந்த பற்களை பிடுங்கி வீசியுள்ளார். அலறித்துடித்து ரத்த வெள்ளத்தில் கிடந்த பரமேஸ்வரி சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து உடனடியாக அங்கிருந்து வெளியேறிய பன்னீர்செல்வம் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடலை மீட்டு கூராய்விற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவாக உள்ள பன்னீர்செல்வத்தை தேடி வருகின்றனர். மனைவியை திருப்புளியால் குத்தி கணவர் கொடூரமாக கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வாடிப்பட்டி அருகே கண்மாயில் மணல் திருட்டு: இளைஞர் ஒருவர் கைது