ETV Bharat / jagte-raho

விசாகப்பட்டினம் விஷ வாயு கசிவு: கைது செய்யப்பட்ட அனைவருக்கும் பிணை! - எல்.ஜி. பாலிமர்ஸ்

விசாகப்பட்டினம் எரிவாயு கசிவு விபத்தில் 15 பேர் உயிரிழப்புக்கும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததுக்கும் காரணமாக இருந்த எல்ஜி பாலிமர்ஸ்-இன் வெளிநாட்டை சேர்ந்த தலைமை நிர்வாக அலுவலர் சுங்கே ஜியோங் உள்பட 12 பிற குற்றவாளிகளுக்கும் ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

Vizag Gas Leak
Vizag Gas Leak
author img

By

Published : Aug 5, 2020, 2:44 PM IST

விசாகப்பட்டினம் (ஆந்திர பிரதேசம்): எல்.ஜி பாலிமர்ஸ் ரசாயன நிறுவனத்தின் அலட்சிய போக்கால் 15 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட தலைமை நிர்வாக அலுவலர் சுங்கே ஜியோங், இயக்குநர் டி.எஸ்.கிம், கூடுதல் இயக்குநர் பிபி. மோகன் உள்பட 12 பேருக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகேயுள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில் எல்.ஜி. பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் மே மாதம் 7ஆம் தேதி அதிகாலை வி‌ஷவாயு கசிவு ஏற்பட்டது.

விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு: அறிக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு

தொழிற்சாலையை சுற்றியுள்ள 5 கி.மீ. சுற்றளவில் உள்ள கிராமங்களை வி‌ஷ வாயு சூழந்தது. இதனால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள், சாலையில் நடந்து சென்றவர்கள் வி‌ஷ வாயுயை சுவாசித்ததால் மயங்கி விழுந்தனர்.

சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் நிலையில், இந்த வி‌ஷ வாயு கசிவால் குழந்தை உள்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வி‌ஷவாயு கசிவு காரணமாக கிராமங்களில் இருந்து சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மாற்று வாயுவை செலுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்துக்கு கரோனா உறுதி

இது தொடர்பான வழக்கில் எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர், நிர்வாக, தொழில்நுட்ப இயக்குநர் உள்பட 12 பேர் இன்று (ஆகஸ்ட் 5) கைது செய்யப்பட்டனர். இதில் இரு அலுவலர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.