ETV Bharat / jagte-raho

செங்கல்பட்டு, பத்திரப்பதிவு மோசடியில் ஈடுபட்ட வழக்கறிஞர் உட்பட இருவர் கைது! - soliciting bond case

செங்கல்பட்டு: வள்ளிபுரத்தில் பத்து ஏக்கர் நிலத்தினை போலி நபரை வைத்து பத்திரப்பதிவு மோசடியில் ஈடுபட்ட வழக்கறிஞர் பெருமாள் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பத்திர பதிவு மோசடியில் ஈடுபட்ட வழக்கறிஞர் உட்பட இருவர் கைது!
பத்திர பதிவு மோசடியில் ஈடுபட்ட வழக்கறிஞர் உட்பட இருவர் கைது!
author img

By

Published : Feb 9, 2020, 11:30 AM IST

குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர் சோனாலிஸா என்பவர் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்தைச் சேர்ந்த வள்ளிபுரம் கிராமத்தில் பத்து ஏக்கர் நிலம் வைத்து அதற்கு காவலாளியாக விஜயகுமார் என்பவரை நியமித்து பராமரித்து வருகிறார்.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் ராந்தம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் பெருமாள் என்பவர் திருக்கழுக்குன்ற பத்திரப்பதிவு அலுவலகத்தில் போலியான நபரை சோனலிஸா என அடையாளம் காட்டி பத்து ஏக்கர் நிலத்தை விற்பனை செய்துள்ளார்.

இந்நிலையில் இவரது நிலத்தின்மீது பத்திரப்பதிவு அலுவலகத்தில் வில்லங்கச்சான்று கூறிய சோனலிஸா, அதே நிலத்தை வேறு ஒருவர் பெயரில் காட்டுவதை உணர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்ததின் பேரில் நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பி அலெக்சாண்டர் உத்தரவின்பேரில் ஆய்வாளர் அன்புசெல்வி புகார் குறித்து விசாரித்தார்.

இதில், சோனாலிஸாவின் 10 ஏக்கர் நிலத்தை ஒரு கோடியே 90 லட்சத்திற்கு முறைகேட்டில் பலருக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து வழக்கறிஞர் பெருமாள் அவருக்கு உடந்தையாக இருந்த தோட்ட காவலர் விஜயகுமார் ஆகியோரை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

பத்திரப்பதிவு மோசடியில் ஈடுபட்ட வழக்கறிஞர் உட்பட இருவர் கைது!

வழக்கறிஞர் பெருமாள் ஏற்கனவே கடந்த 2015இல் ரெட்டியாப்பா ரெட்டி என்பவரின் 7.5 ஏக்கர் நிலத்தையும் , 2017 சேகர் என்பவர் 2.5 ஏக்கர் நிலத்தையும் , பாலு என்பவரின் 3.5 ஏக்கர் நிலத்தையும் மோசடியில் ஈடுபட்டு சிறைக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பத்து ஏக்கர் நிலம் மோசடியில் மூன்றாவது முறையாக கைது செய்யப்படுகிறார்.

மூன்றாவதாக மோசடி செய்யப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.2.5கோடி ஆகும்.

இதையும் படிங்க...தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை - தமிழ்நாடு சுகாதாரத் துறை அறிவிப்பு!

Intro:திருக்கழுக்குன்றம் அடுத்த வள்ளிபுரம் பகுதியில்1கோடியே 90லட்சம் மதிப்பிலான 10ஏக்கர் நிலத்தினை போலி நபரை வைத்து பத்திர பதிவு மோசடியில் ஈடுபட்ட வழக்கறிஞர் பெருமாள் உள்ளிட்ட இருவர் கைது.. இவரின் கைது பல நிலை மோசடி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் ..

Body:குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர் சோனாலிசா என்பவர் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்தைச் சேர்ந்த வல்லிபுரம் கிராமத்தில் 10 ஏக்கர் நிலம் வைத்து அதற்கு காவலாளியாக விஜயகுமார் என்பவரை நியமித்து பராமரித்து வந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் ராந்தம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் பெருமாள் என்பவர் திருக்கழுக்குன்ற பத்திரப்பதிவு அலுவலகத்தில் போலியான நபரை சோனலிஸா என அடையாளம் காட்டி பத்து ஏக்கர் நிலத்தை விற்பனை செய்துள்ளார்..

இந்நிலையில் இவரது நிலத்தின்மீது பத்திரப்பதிவு அலுவலகத்தில் வில்லங்கச்சான்று கூறிய சோனலிஸா ,அதே நிலத்தை வேறு ஒருவர் பெயரில் காட்டுவதை உணர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்ததின் பேரில் நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பி அலெக்சாண்டர் உத்தரவின்பேரில் ஆய்வாளர் அன்புசெல்வி புகார் குறித்து விசாரிக்கையில் , சோனா லிசா அவரின் 10 ஏக்கர் நிலத்தை 1கோடியே 90 லட்சத்திற்கு முறைகேட்டில் பலருக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து வழக்கறிஞர் பெருமாள் அவருக்கு உடந்தையாக இருந்த தோட்ட காவலர் விஜயகுமார் ஆகியோரை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்..

வழக்கறிஞர் பெருமாள் ஏற்கனவே கடந்த 2015இல் ரெட்டியாப்பா ரெட்டி என்பவரின் 7.5 ஏக்கர் நிலத்தையும் , 2017 சேகர் என்பவர் 2.5 ஏக்கர் நிலத்தையும் , பாலு என்பவரின் 3.5 ஏக்கர் நிலத்தையும் மோசடியில் ஈடுபட்டு சிறைக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தற்போது 2017 10 ஏக்கர் நிலம் மோசடியில் மூன்றாவது முறையாக கைது செய்யப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

Conclusion:மூன்றாவதாக மோசடி செய்யப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பு 2.5கோடி என்பதும் , மேலும் பல நில மோசடி வழக்கில் ஈடுபட்டு உள்ளது தற்போது இதன் மூலம் வெளிச்சத்துக்கு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.