ETV Bharat / jagte-raho

கொள்ளையடித்த பணத்தில் விமானப் பயணம் - பைக்கில் வரும்போது சிக்கிய கொள்ளையர்! - கொள்ளை

சென்னை: கொள்ளையடித்துவிட்டு விமானத்தில் பறந்து சென்று மகாராஷ்டிராவில் உல்லாசம் அனுபவித்து திரும்பிய கொள்ளையரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

snatcher
snatcher
author img

By

Published : Feb 17, 2020, 7:48 PM IST

சென்னை திருமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சங்கிலிப் பறிப்பு, கொள்ளை நிகழ்வுகள் அதிகரித்துள்ளதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதனையடுத்து துணை ஆணையர் முத்துசாமி உத்தரவின் பேரில் தனிப்படைக் காவல் துறையினர் 10 நாட்களாக பிகார், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில காவல் துறையினரிடம் தகவல் சேகரித்தனர்.

தீவிரத் தேடுதல் வேட்டையை நடத்திய காவல் துறையினர் சுமார் 60க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தனர். சுமார் இரண்டாயிரம் கிலோ மீட்டர் வரை கண்காணிப்பிலும் ஈடுபட்டனர். திருவல்லிக்கேணி, அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள விடுதிகளிலும் சோதனை செய்தனர். ஆனால் யாரும் சிக்கவில்லை. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 1ஆம் தேதியன்று, அண்ணா நகர் திருமங்கலம் சாலையில் வாகனச் சோதனையில் காவல் துறையினர் ஈடுபட்டபோது ஒருவர் சிக்கிக்கொண்டார்.

தொடர் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட ஷிண்டே

அவரை விசாரித்ததில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அமோல் பாலா சாகிப் ஷிண்டே (29) எனத் தெரியவந்தது. இவர் ஏற்கனவே ஹைதராபாத்தில் திருடிவிட்டு சிறையிலிருந்து வெளிவந்த பிறகு, ஆந்திரப் பதிவெண் கொண்ட இரு சக்கர வாகனத்தில் சென்னை வந்து பல்வேறு இடங்களில் கொள்ளை நிகழ்வுகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக திருமங்கலம் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டதை அடுத்து அவர் சென்னையில் இருந்து விமானம் மூலமாகச் சென்றுள்ளார். பின்னர் சென்னை திரும்பிய ஷிண்டே, இரு சக்கர வாகனத்தில் அண்ணாநகர் பகுதியில் வந்தபொழுது வாகனச் சோதனையில் சிக்கிக்கொண்டார்.

கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல்

இதனையடுத்து ஷிண்டேவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர், பின்னர் புழல் சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் காவல் துறையினரை திசைத்திருப்ப விமானத்தில் பறந்தும், தொடர்வண்டி மூலம் பயணித்தும், ஆந்திரப் பதிவெண் கொண்ட இரு சக்கர வாகனத்தை கொள்ளையர் ஷிண்டே பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: மின்சார ரயிலில் இருந்து கீழே விழுந்த இளைஞர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.