கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகேயுள்ள பிடம்பள்ளியில் முத்துச்சாமி என்பவர் தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்து சத்யா(20) என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். சத்யாவின் தந்தை சந்திரன். சத்யாவின் சிறுவயதிலேயே அவரது தந்தை இறந்துவிட்டார். சத்யாவிற்கு அம்மா, ஒரு தம்பி மட்டுமே இருந்து உள்ளனர்.
வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தநிலையில், திருமண ஏற்பாடுகளை இவரது உறவினர்கள் செய்து வந்தனர். டிசம்பர் 1ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்த நிலையில், திருமணப் பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் ஏற்பாடு செய்திருந்த திருமணம் பிடிக்காமல் சத்யா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இவரது உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுகவால் மீண்டும் ஒரு விபத்து... இந்த முறை பேனர் இல்லை கொடிக் கம்பம்!