டொவினோ தாமஸ், இயக்குநர் பேஸில் ஜோசப் இயக்கும் 'மின்னல் முரளி' என்னும் படத்தில் நடித்துவருகிறார். இதில் டொவினோ தாமஸ் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பிற்காக எர்ணாகுளம் மாவட்டம் காலடி பகுதியில் உள்ள பெரியார் ஆற்றங்கரையில் உரிய அனுமதி பெற்று தேவாலய அரங்கம் ஒன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த அரங்கத்தை நேற்று இந்து அமைப்பை சேர்ந்த சிலர் இடித்துத் தள்ளினர். இதற்கு அந்த்ராஷ்டிர இந்து பரிஷத் அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இதில் ஈடுபட்ட, ராகுல் ராஜ் (19), ராகுல் (23), கோகுல் (25), சந்தீப் குமார் (33) ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கரி சதீஷை காவல்துறையினர் திங்கள் கிழமை (மே 25) கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தேவாலய அரங்கை இடித்த இந்து பரிஷத் - பினராயி விஜயன் காட்டம்!