சென்னை: அண்ணாநகர் அருகே மொட்டை மாடியில் இளம்பெண்கள் முன்பு ஆடையை களைந்து தகாத செயலில் ஈடுபட்ட போலி சாமியாரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதே குடியிருப்பில் ராஜேந்திரன்(42) என்பவரும் வசித்து வருகின்றார். தன்னை சாமியாராகக் கூறிக்கொள்ளும் இவர், அதே பகுதி இளம்பெண்கள் சிலர் மொட்டை மாடியில் நின்று பேசி கொண்டிருந்தபோது, ராஜேந்திரன் பெண்கள் முன்பு உடையை கழட்டி தகாத செயலில் ஈடுபட்டுள்ளார்.
இதனைக் கண்ட பெண்கள் உடனடியாக திருமங்கலம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இதே போன்று குடியிருப்பில் வசித்து வரும் பல பெண்களிடம் தனது ஆணுறுப்பை காட்டி ஆபாச செயலில் ஈடுபட்டு வந்ததும், ராஜேந்திரன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.
இதையும் படிங்க: ஜிஎஸ்டி நிலுவைக்கான கடன் வசதி; 13 மாநிலங்கள் ஒப்புதல்!